Header Ads



பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி


பாகிஸ்தானில் வரலாற்று சிறப்பு மிக்க நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெற்றது. அத்துடன் கைபல் பாக்துங்வா, பஞ்சாப், சிந்து மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களுக்கும் 11-05-2013 தேர்தல் நடத்தப்பட்டது.

342 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு 4670 வேட்பாளர்களும், மாகாண சபைகளுக்கு சுமார் 11 ஆயிரம் வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். மிரட்டல் மற்றும் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்காளர்கள் வருகையை அதிகரிப்பதற்காக வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. அதன்படி 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

சர்கோதா தொகுதியில் நவாஸ் ஷெரீப் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப்பும் முன்னிலையில் உள்ளார். 

பெஷாவர்-1 தொகுதியில் தெரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட குலாம் பிலவுரை விட 66 ஆயிரத்து 464 வாக்குகளை இம்ரான்கான் அதிகமாக பெற்றுள்ளார.

லாகூர், ராவல்பிண்டி மற்றும் மியான்வாலி ஆகிய தொகுதிகளிலும் இம்ரான் கான் முன்னிலையில் இருக்கிறார். 

No comments

Powered by Blogger.