மீண்டும் வருகிறார் அலி அக்பர் ஹாஸ்மி ரப்சஞ்சானி
ஈரான் பாராளுமன்றத்திற்கு வரும் ஜூன் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, கடைசி நிமிடங்களில் முன்னாள் அதிபர் அலி அக்பர் ஹாஸ்மி ரப்சஞ்சானி மனு தாக்கல் செய்தார்.
78 வயதான ரப்சஞ்சானி, சீர்திருத்தவாதிகளின் ஆதரவுடன் நிற்பதால், பழமைவாத கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான்-ஈராக் போரின் போது ராணுவ மந்திரியாகவும் அவர் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பு சட்டப்படி, தற்போதைய அதிபர் மகமூத் அகமதிநிஜாத் மீண்டும் தேர்தலில் நிற்க முடியாது. இவரது பில்டர்ஸ் கூட்டணிக்கட்சி சார்பாக ரஹீம் மாஷாயி போட்டியிடுகிறார். இவர் மதத்தலைவரான அயோத்தல்லா அலி காமேனியின் ஆதரவாளர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
அணு ஆயுத நடவடிக்கைகளால் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வரும் ஈரானுக்கு இந்த தேர்தல் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Post a Comment