யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் கடைகள் உடைக்கப்பட்டு, கொள்ளை (படங்கள்)
(பாறூக் சிகான்)
யாழ் நகரப்பகுதியில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் நேற்று நள்ளிரவு 30-4-2013 உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரிய கடை மின்சார நிலைய வீதியில் இடம்பெற்றுள்ளது.
வழமை போன்று காலை கடை உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையத்தை திறப்பதற்கு தயாராக இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதை அவதானித்ததாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸ் விசாரணை மேற்கொண்டதுடன் தடயவியல் நிபுணர்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் காணக்கூடியதாக இருந்தது.
பொலிஸாரின் விசாரணை அறிக்கையில் 3 வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு ஒரு கடையில் மாத்திரம் 7000 ரூபா பெறுமதியான பணம் களவாடப்பட்டுள்ளதுடன்,ஏனைய இரு கடைகளும் திருடர்கள் உடைத்து கைவிட்டு சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த கடைகள் அமைந்துள்ள பகுதி பொலிசார் அதிகம் நடமாடும் பகுதியாகும். களவாடப்பட்ட கடைகளில் தொலைபேசி விற்பனை,ஆடையகம் மற்றும் தையல் தொழிலகம் என்பன உள்ளடங்குகின்றன.
நேற்று நகரப்பகுதியில் பொலிசார் இசைநிகழ்ச்சியை இரசித்துக்கொண்டிருந்த சமயம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.இம்மூன்று கடைகளும் யாழ் முஸ்லீம்களுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment