இலங்கை மீது நேரடி அழுத்தங்களை பிரயோகிப்போம் - அமெரிக்கா அறிவிப்பு
இலங்கை மீது அமெரிக்கா நேரடியான அழுத்தங்களைக் கொடுக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ரெல் தெரிவித்துள்ளார்.
வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பற்றிக் வென்ரெல்லிடம், அமெரிக்க அறிக்கைக்கு அப்பால், இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் ஏதாவது இராஜதந்திர நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ரெல்,
“இலங்கையுடன் இணைந்து இருதரப்பு ரீதியில் தொடர்ந்து பணியாற்றவுள்ளோம். அத்துடன் அனைத்துலக சமூகத்தில் இலங்கை தொடர்பாக ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ள, விருப்பம் கொண்டுள்ள தரப்புகளுடன் தொடர்ந்து நாம் வெளிப்படையான முறையில் பணியாற்றுகிறோம்.
இருதரப்பு ரீதியாகவும், நாம் தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளது. ஆனால், அனைத்துலக சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்தும் தொடர்ந்து செய்ய வேண்டியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மற்றும் ஏனைய அமைப்புகளில் இந்த விவகாரம் உள்ளது.
எனவே எமது கவலைகளை நாம் நேரடியாக தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று அவர் பதிலளித்துள்ளார்.

Post a Comment