Header Ads



வைத்தியசாலைகளில் பணியாற்றும் முஸ்லிம் சகோதரிகள் மீது குறிவைத்த ஹெல உறுமய


சிங்கள இணையம் ஒன்றில் இன்று 1-5-2013 வெளியான அறிக்கையின் தமிழாக்கம்.

(ஜப்னா முஸ்லிம் இணையத்திற்காக தமிழாக்கம் - அபூ முஸ்னா)

உரிய சீறுடையினை மாற்றி நாட்டின் பொது சட்டத்திற்கு மாற்றமாகச் செயற்படுவோருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என ஜாதிக ஹெல உருமய தெரிவித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த  அத்துரலிய ரத்ன தேரரினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு,

கல்பிட்டி வைத்தியசாலை உட்பட புத்தளம் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் பெண் சிற்றூழியர்கள் தாம் அணியவேண்டிய சீறுடைக்கு மாற்றமான வேறு ஆடைகளை அணிந்து பணியாற்றுவதாக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இவ்வாறு வேறு சீறுடையில் பணியாற்றுபவர்கள் முஸ்லிம் பெண்களேயாவர். அந்த உடையானது அவர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடையாகும்.  இதனை வைத்துக் கொண்டு வைத்தியசாலைகளில் அணிய வேண்டிய சீருடைக்கு பதிலாக வேறு சீருடைகளை அணிந்து பணியாற்றுவதால் வைத்தியசாலைக்குள் குழப்பமான நிலையும், பிரச்சினைகளும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.  கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலை, புத்தளம் தள வைத்தியசாலை, மாம்புரி கிராமிய வைத்தியசாலை மற்றும் ஆலங்குடா மத்திய மருந்தகம் போன்ற வைத்தியசாலைகளில் உரிய சீருடைக்குப் பதிலாக பெண் சிற்றூழியர்கள் வேறு சீருடைகளை அணிந்து செயற்படுவதாகவும், அவ்வாறான உடைகளுக்குப் பின்னால் முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களின் தூண்டுதல் உள்ளதாகவும் அவ்வைத்தியசாலைகளின் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நிலைமை அவ்வாறானதெனின் அது மிகவும் பயங்கரமான விடயமாகும்.  வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்கள் அணிய வேண்டிய சீருடைக்கு பதிலாக யாரோ ஒரு குழுக்களின் பலவந்தம் காரணமாக வேறு உடைகளை அணிந்து பணியாற்றுவார்களாயின் அவ்வாறு பணியாற்றும் சிற்றூழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது உரிய அமைச்சரினதும், உரிய அதிகாரிகளினதும், பொறுப்பாளர்களினதும் கடமையாகும்.  இது உண்மையிலேயே நிறுவன சுற்றுநிருபங்களையும், நிறுவன சட்டதிட்டங்களை மீறும் ஒரு செயற்பாடாகும். அத்துடன் நாட்டின் சட்டதிட்டத்தினையும் சவாலுக்கு உட்படுத்தும் ஒரு செயற்பாடுமாகும். இது தொடர்பில் குறித்த வைத்தியசாலையின் பொறுப்பாளர்கள்  மேலிடத்திற்கு அறிவித்து இதுவரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது குறித்த முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்கள் மீது உள்ள அச்சத்தினாலா? அவ்வாறின்றேல் குறித்த பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதுள்ள அச்சத்தினாலா?  முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகள் அதிகளவில் உள்ள இந்த பிரதேசங்களில் மிகவும் விரும்பத்தகாத பல செயற்பாடுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளது.  புத்தளம் நகரில் வைத்து சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பச்சைப் பச்சையாக பட்டப்பகலில் வெட்டிக் குத்தி கொலை செய்யப்பட்டார்.  அத்தோடு போதைப் பொருள், போதை வில்லைகள், திருட்டுப் பொருட்கள் உட்பட பல்வேறு திருட்டு நடவடிக்கைகள் இப்பிரதுசங்களில் பிரபலமானதாகும்.

கடந்த காலங்களில் நாம் நாட்டினுள் முஸ்லிம் அடிப்படைவாதிகள் நாட்டைக் குழப்பத்திற்கு உள்ளாக்குவதாக எச்சரிக்கை விடுத்து வந்தோம்.  இந்நிலையில் இவ்வாறு சீருடையினை மாற்றும் நடவடிக்கையானது எமது எச்சரிக்கையை மேலும் உறுதிப்படுத்துகின்றது.  அரச பாடசாலைகளில்  வழமையில் உள்ள சீருடைக்கு பதிலாக முஸ்லிம் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் சீருடையினை அணிவதற்கு முஸ்லிம் மாணவர்களை உட்படுத்தி பின்னர் அதனை சுற்றுநிருபமாக அங்கீகரித்ததைப் போல இந்த வைத்தியசாலை சிற்றூழியர்களின் உடையினையும் மாற்றி முஸ்லிம் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடையினை அணியும் வகையில் செயற்படுவதானது சமூக பிளவுக்கு உட்படுத்துவதாகும். இதில் உள்ள பயங்கர தன்மையினை  உணர்ந்து உடனடியாக தேவையான சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும்,  சமூக ஒருமைப்பாட்டுக்கு, தேசிய ஒருமைப்பாட்டுக்கு  இந்த நடவடிக்கையானது உடந்தையாக உள்ளதனால் பொறுப்பாளர்கள் உடனடியாக இது விடயத்தில் விஷேட கவனத்தைச் செலுத்த வேண்டும். 

9 comments:

  1. முஸ்லிம் பெண்களென்றால் அவர்கள் ஒருபோதும் அங்கங்களை காட்டிக் கொண்டு திரியமாட்டார்கள். தேரரின் வாதப்படி அங்கங்களை மறைத்துக்கொண்டு இருப்பதுதான் குற்றமா நாட்டில் இவ்வளவு மக்கள் இருந்தும், அவர்கள் இதுபோன்ற அறிவித்தல்களை வெளியிட்டதில்லை. ஆனால் பொதுபலசேனவுக்கும், ஜாதிகஹெல உறுமயவுக்கும், இனவாத அமைச்சர் சம்பிக்கரணவக்க வுக்கும் ஏன் இவ்வளவு மோகமாகவுள்ளது காரணம் இவர்கள் மனதைக்கட்டுப்படுத்தமுடியாத கபோதிகள். நீங்கள் என்னசொன்னாலும் ஒரு ம. வையும் புடுங்கமுடியாது இதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்..

    ReplyDelete
  2. அணைந்த நெருப்பை மீண்டும் ஊதிப் பற்றவைக்கின்றானே! இப்போது முஸ்லிம்கள் குட்டக் குட்டக் குணியப்போவதில்லை என்பதை தேரர் இன்னும் அறியவில்லை.
    தேரரே! இதைத்தான் பயங்கரமென்று சொல்கிறீரே! உமக்கு கடுகளவாவது அறிவிருந்தால், அநாகரீக, அசிங்க ஆடைகளோடு நடமாடும் வெளிநாட்டு வெள்ளையர்கள் பற்றி, ஜீன்ஸும், சோட்டும் அடித்து நெஞ்சைத் திறந்து அலையும் பெண்கள் பற்றி உமக்கு எதுவும் தெரியாதே. அவர்களைப் பார்த்து ரசிக்கலாமே.
    இது தான் மதகுருவாக இருக்கும் உமது பண்பா???? கேவலம்

    ReplyDelete
  3. ஓசிச் சாப்பாடு.

    உடல் உழைப்பில்லை.

    திருமணமில்லை! இவர்கள் வாழவில்லை, இன்னும் வாழ வக்கில்லை,

    குரூர எண்ணம் ஆனால் மனம் குளிரும் துகில்!

    இப்படிச் சம்மந்தத மில்லாமல், வாழ்க்கை போவதால், வாழ்கையில் பிடிப்பில்லை.

    புத்தன் கண்டால் இவர்களுக்கெதிராகப் போர் தொடுத்திருப்பான்! அவன் கொள்கைகளை மொட்டிலேயே முடக்கியதற்ற்கு!!!
    அதலால்,
    இவர்களுக்கு வாழ்பவர்களைக் கண்டால் வயிறெரிந்து விழுகிறார்கள், வாய் வழியால் குப்பைகள் வார்த்தைகளாய் வருகிறன!

    இவர்களைப் பார்த்து பரிதபிப்போம்!
    இவர்களின் பசபசப்பில் பச்சாதாபம் கொள்வோம்!



    ReplyDelete
  4. It's better thero mind his own business.............

    ReplyDelete
  5. J.H.U. is trying to spread the racism in the Kalpitiya D.S.Division.it is impossible. we are trying to enhance the peace among societies . now he is revealing daydream.

    ReplyDelete
  6. தன்னை சூழ உள்ள எந்த ஒரு உயிருக்கும் மனதளவில்கூட தீங்கு நினைக்காதவந்தான் ஒரு உண்மையான பௌத்தன் ..... இது புத்த பெருமானின் போதனை....
    முதலில் புத்தரின் போதனைகளை முறையாக படித்துவிட்டு அதன் பின் அவரின் உடையை அணியுங்கள்......

    ReplyDelete
  7. v good inum yannavellam iruku soullu tharar sollu Hallal visayam Vantha penputhan Halal Thadiparthu unukerarkal yavoum nanmaika tharai mariyathi kurivak yalutha vandam sakotharar kala ithu ulakam parkum web yaluthum pothu mekavoum kavenathudan yalutha vendum thararkal mehavum nallaverkal nirayapar irukerarkal mubarak rajapkasa aswar rajapaksa powsy rajapaksa pola iverkalilum oru selar irukerarkal mariyahikum sankaikum uriya niraya thararkal sri lankavil irukerarkal thamby oruver karuthuku odu motha thararkalium tahkak koudathu nadapavai yallam nanmaiku than

    ReplyDelete
  8. He is the number one satan master mind creator of all anti muslim activity they are advisors of president also they want to create problem always they never thing about peace and harmony we keep do pray to destroy all our enemies

    ReplyDelete
  9. @Ranees
    திருமணம் செய்யாததன் விளைவுதான் இப்படி பெண்களைப் பார்த்துக் கொண்டு திரிகிறார்கள். சிறுவயதிலேயே இவர்கள் வாழ்க்கை பற்றித் தீர்மானிக்கப் படுவதால், இது ஒருவகையான உளவியல் பிரச்சினை.
    ஒழுக்கமுள்ள, நற்பண்புள்ள தேரர்களும் இருக்கிறார்கள். சரியோ, பிழையோ அவர்கள் அந்த வாழ்க்கையை உண்மையாக ஏற்று நடப்பவர்கள். அவர்களிடம் இது போன்ற கேடுகெட்ட பண்புகள் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.