Header Ads



பிரதேச காணி அதிகாரம் மாவட்ட செயலாளருக்கு மாற்றப்பட்டுள்ளது..!


(அஷ்ரப் ஏ சமத்)

பிரதேச செயலாளர் தமது பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட காணிகளை பொதுமக்களுக்கு பகிந்தளித்தல் அல்லது மாற்றுதல் வேறு அரச தேவைகளுக்கு காணிகளை பெற்றுக்கொடுத்தல் சம்பந்தமான அதிகாரம் மாவட்ட செயலகங்களில் உள்ள மேலதிக மாவட்ட செயலாளருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை காலம் காணி பற்றிய சகல விடயங்கள் மற்றும் அதிகாரங்களும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த காலங்களில் பிரதேச செயலாளர்கள் பிரிவில்  காணி சம்பந்தப்பட்ட விடயங்களில் காணி அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களிடையே முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக காணி அமைச்சின் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டே  இக் காணி அதிகாரத்தினை பொதுநிருவாக அமைச்சர் டப்ளியு.டி செனவிரத்தினவின் நடவடிக்கையின் பேரில் சகல காணி சம்பந்தப்பட் அதிகாரங்களும் உடன் அமுலுக்கும் வரை மாவட்டங்களில் உள்ள மேலதிக மாவட்ட  செயலாளருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சகல மாவட்ட செயலாளருக்கும் அறிவித்துள்ளார். அத்துடன் காணிப்பங்கீடு மற்றும் நடவடிக்கைக்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரவித்தார்.

இக்  குழுவில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் இருவர், மாவட்டச் செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர் மற்றும் காணி அமைச்சின் அதிகாரியும் இக் குழுவில் அங்கத்துவம் பெறுவார்கள். இக் குழுவே பிரதேச செயலகங்களின் காணிபற்றிய தீர்மாணத்தை எடுக்கும்  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொது நிருவாக அமைச்சா வெளியீட்டுள்ள  ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.