பிக்குகள் ஏனைய சமயங்களுடன் மோதுவது பெரும்பான்மை இனத்திற்கு அழிவை ஏற்படுத்தும்
சில பிக்குகள் ஏனைய சமயங்களுடன் மோதல்களை உருவாக்க முற்படுகின்றனர். இதனால் பெரும்பான்மை இனத்திற்கு அழிவு ஏற்படும் அபாயமுள்ளது. இதனை பௌத்த மாநாயக்கத் தேரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிக்குகள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட
வேண்டுமென பிரதமரும் புத்தசாசன, மத விவகார அமைச்சருமான டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
மக்களின் மனங்களை வெல்லக்ககூடிய மதத் தலைவர்கள் இல்லையென்றால், எவ்வளவுதான் விகாரைகள் அமைத்தும் பயனில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

பொதுபலசேன பயங்கரவாதிகள் பிக்குகளின் காவி அணிந்து ஏனைய மதங்களுடன் மோதல்களை உருவாக்குவது பெளத்த இனத்திற்கு பேரழிவையே உண்டாக்கும் என்று சொல்ல பயந்துதானா பொதுபலசேனவை சொல்வதற்கு மறுக்கிறார்கள். அப்படியென்றால் இந்த பொதுபலசேனவிற்கு அரசியலில் பெரும் செல்வாக்கும் அரசியல் பலமும் உள்ளது என்றுதானே அர்த்தம்.
ReplyDeleteபிரதமரே உண்மையான பெளத்த பிக்குகள் 100 வீதம் ஒழுங்காகத்தான் இருக்கின்றார்கள் அவர்கள் யாருடனும் பிரச்சினைக்குபோகவுமில்லை வழி தவறி நடக்கவுமில்லை. ஆனால் போதுபலசேன, ஜாதிக ஹெல உறுமய, ராவய போன்றவர்களும், சம்பிக்க ரணவக்க போன்றவர்களாலும் தான் பெளத்தர்களுக்கு அழிவு உண்டாகும் என்பதை நீங்கள் நன்கு அறிந்தும் அவர்களை யாரும் இதுவரை கண்டிக்காததும் தண்டிக்காததும்தான் ஏனைய மதத்தவர்களுடன் பெளத்த மதச்சகோதரர்களுக்கும் மனவேதனையான விடயம்.......
ஒரு சிரேஷ்ட பிரஜை இந்த நாட்டின் பிரதமர் கூறும் அறிவுரையை ஏன் இந்த இனவாதிகள் புறக்கணித்து நடக்கிறார்கள் வருமுன் காப்பதே நல்லது
ReplyDeleteMajority of Buddhist Monks, who truly follow the teachings of Buddhism, do not make any problem to others. They really wants peace with other people.
ReplyDeleteBut only FAKE Monks from BBS and other racist elements do create problem to this country, Buddhism and other religions of this land. because they do play politics not follow the teaching of Buddhism.