மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் மீட்கப்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமம் எப்.வலய காட்டுப்பகுதியிலிருந்து வெட்டிய பனைமரத்தின் நடுப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாதுகாப்பான கறுப்பு பொலித்தீன் மற்றும் முல்லு கம்பிகளினால் சுற்றி இரண்டு ஜெர்மன் தாயரிப்பிலான புதிய கை குண்டும்,ரீ 56 ரக 60 தோட்டாவும்,2 மெகசினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகரும்,புலானய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.எம்.றஹீம் தெரிவித்தார்.
சுவிஸ் கிராமம் எப்.வலய காட்டுப்பகுதியில் விறகு வெட்டும் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸ் புலானய்வு பிரிவுக்கு வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸ் புலானய்வு பிரிவு பொறுப்பதிகாரி என்.எம்.றஹீம் தலைமையிலான எஸ்.ஐ.லெவுலி எத்த ,பொலிஸ் உத்தியோகத்தர்களான மற்றும் 61217 ஏ.சி.எம்.சுபியான் ,66427 பிரியங்கர ,80044 மஜீட் ஆகியோர் குறித்த சட்ட விரோத ஆயுதங்களை கைப்பற்றி அதனை மீட்டுள்ளனர்.
சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் தற்போது மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,விரைவில் இதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸ் புலானய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி என்.எம்.றஹீம் சுவிஸ் கிராமம் எப்.வலய காட்டுப்பகுதியில் இருந்த ஒருவர் இந்த சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருந்திருக்கலாம் எனவும் பொலிசாரின் பரீசோதனையின் பயத்தால் மறைத்து வைத்திருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.



Post a Comment