Header Ads



மௌபிம சிங்கள பத்திரிகையில் வெளியான செய்தி


(தமிழில் அபூ முஸ்னா)

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களை நிறுத்துவதற்கும், அவர்களையும் இந்நாட்டில் சமமாக நடாத்தும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC)  இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  எண்ணெய் ஏற்றுமதி செய்யும் 12 நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் அதிகமான நாடுகள் முஸ்லிம் நாடுகளாகும்.  ஈரான், ஈராக், சவூதி அரேபியா, டுபாய், இந்தோனேசியா உள்ளிட்ட இந்த அமைப்பினைச் சேர்ந்த நாடுகள் இந்நாட்டில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகளினால் இனங்களுக்கிடையில் நல்லெண்ண உறவுகள் சீர்குலைவது மாத்திரமின்றி சிறுபான்மையினரின் உரிமைகளும் மீறப்படும் நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.

எனவே இவ்விடயத்தில் தலையிட்டு செயற்படவேண்டியது இந்நாட்டு அரசின் பொறுப்பாகும்.  அரசு இது விடயத்தில் கூடிய சீக்கிரம் கவனம் செலுத்தி செயற்படும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் இந்த அமைப்பு அரசிடம் தெரிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் செயலமர்வின் போது கூட இந்த அமைப்பின் பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், எனவே தமது இந்த வேண்டுகோள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் ஈர்க்கப்படும் என்பது தமது நம்பிக்கையாகும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(இன்றைய 12-05-2013 மௌபிம சிங்கள பத்திரிகையில் வெளியான செய்தியின் தமிழாக்கம்)

1 comment:

Powered by Blogger.