கனடாவில் இலங்கையர் சுட்டுக்கொலை - கண்காணிப்பு கமராவில் பதிவான 3 கொலையாளிகள்
கனடாவில் ரொரன்ரோ கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருவர், வியாழக்கிழமை மாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வைத்திலிங்கம் சுரேந்திரா என்ற 38 வயதுடையவரே, வியாழன் மாலை 3 மணியளவில் அவரது வீட்டின் பின்புறம் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
மூன்று பேர் அவரது மார்பில் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கனேடியக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட சுரேந்திரா, தனது மனைவி மற்றும் 4 வயது மகனுடன் பிஞ்ச் அவென்யூவில் வசித்து வந்துள்ளார். அவரது தனது பிறந்தநாளை புதன்கிழமை கொண்டாடியுள்ளார். இவர் இலக்கு வைத்தே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் நம்புகின்றனர்.
சுற்றியுள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு காணொலிப் பதிவு கருவிகளில் கொலையாளிகள் மூவரும் பதிவாகியுள்ளனர். அவர்களின் அங்க அடையாளங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர் கொலையாளிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment