மகனை ஒழுக்கமாக வளர்க்காததால் தாய்க்கு அபராதம்
மகனை ஒழுக்கமாக வளர்க்காததால் தாய்க்கு அபராதம் விதித்து ஜெர்மனிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜெர்மனியில் கடந்த 2009ம் ஆண்டில் ஒரு பள்ளிக்கூடத்தில் 17 வயது நிரம்பிய மாணவன் ஒருவன் அங்கிருந்த 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். மேலும் 14 பேர் படுகாயமுற்றனர். இறுதியில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்து போனான்.
இதுகுறித்த விசாரணையில் மாணவன் ஏற்படுத்திய சேதத்திற்கு 9.3 மில்லியன் யூரோ தொகையை அவனது தாய் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் துப்பாக்கியை பத்திரமாக பூட்டி வைக்காதது பெற்றோரின் குற்றமாகும் என்றும் தாய் தன் கடமையைச் செய்யத் தவறியதால் ஏற்பட்ட விளைவு 15 பேரின் உயிரை பறித்துள்ளது என்றும் காரணம் காட்டி இந்த தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. inneram

Post a Comment