Header Ads



கல்முனை மேயர் தொடர்பில் ரண்முத்துகல சங்கரத்ன தேரரின் விளக்கம்


கல்முனை மேராக மீராசாஹிப் தொடர வேண்டும் - சங்கரத்தின தேரர் ஹக்கீமுக்கு கடிதம் என்ற தலைப்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் அன்மையில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த செய்தியை எமக்கு அனுப்பிவைத்தது மேயரின் உத்தியோகபூர்வ ஊடகச் செயலாளர் ஆவார்.

இதையடுத்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பிரபல்யமான ஊடகவியலாளர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் தொடர்புகொண்டு சங்கரத்தின தேரர் ஹக்கீமுக்கு அவ்வாறான கடிதமொன்றை அனுப்பிவைக்கவில்லையென திட்டவட்டமாக வாதிட்டார்.

இதையடுத்து ஜப்னா முஸ்லிம் இணையமானது கல்முனை மேயரின் ஊடகச் செயலாளருக்கு ஒரு ஈமெயில் அனுப்பி அந்த செய்தி குறித்து விளக்கம் கேட்டது. எனினும் இதுவரை மேயரின் ஊடகச் செயலாளர் அதுபற்றி எமக்கு எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.

இதையடுத்து ஜப்னா முஸ்லிம் இணையமானது இன்று ஞாயிற்றுக்கிழமை, 12 ஆம் திகதி கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விஹாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரரின் கையடக்க தொலைபேசிக்கு தொடர்புகொண்டு இதுபற்றி விசாரித்தது.

அவர் வழங்கிய விளக்கம் கீழ்வருமாறு,

மீராசாஹிப் தனது மேயர் பதவியில் தொடர வேண்டுமென்று ரவூப் ஹக்கீமுக்கு இதுவரை நான் கடிதம் அனுப்பவில்லை. ஆனால் அவ்வாறு ஒரு கடிதத்தை அனுப்பிவைக்க இருக்கிறேன்.

தற்போதைய மேயர் இன,மத, மொழி பாகுபாடின்றி செயற்படுகிறார். எனவேதான் அவர் மேயர் பதவியில் தொடர வேண்டுமென ஹக்கீமுக்கு கடிதம் எழுதவுள்ளேன். இதன் அர்த்தம் முன்னர் பணியாற்றிய மேயர்கள் பாகுபாடின்றி செயற்பட்டவர்கள் என்று ஆகிவிடாது எனவும் சங்கரத்தின தேரர் மேலும் குறிப்பிட்டார்.

மேயரின் ஊடகச் செயலாளரின் கவனத்திற்கு..!

ரவூப் ஹக்கீமுக்கு கடிதம் எழுதப்படாத ஒரு நிலையில், கடிதம் எழுதப்பட்டதாக கூறி நீங்கள் எமக்கு அனுப்பிய செய்தி குறித்து கவலைப்படுவதுடன், அதுகுறித்து நாங்கள் உங்களிடம் விளக்கம்கேட்டு அனுப்பிய ஈமெயிலுக்கு நீங்கள் இதுவரை பதில் வழங்காமையும் மிகவும் துரதிஷ்டவசமானது.

5 comments:

  1. Ethallam Arasiyal Bathikalukku Sahjam Appa
    Unmai Sol Thuninthu Nil
    Poeyai Vidu
    Nermaiya Eru
    Enrum Unnai Ulakam Mathikkum

    ReplyDelete
  2. அப்பா எப்படி எல்லாம் நடதுராங்க அரசியல்......

    ReplyDelete
  3. ''பசியுள்ள இரண்டு ஓநாய்களை ஆட்டு மந்தையில் விட்டுவிடின் அவை எத்தணை குழப்பத்தை உண்டுபண்ணி விடுமோ,அத்துணை குழப்பத்தை ஒரு மனிதனுடைய பொருளாசையும் பதவி மோகமும் அவனுடைய மார்க்கத்தில் உண்டுபண்ணிவிடும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள்.

    ReplyDelete
  4. Dear Jaffna Muslim,

    Before publishing the news Jaffna Muslim should take measures to ensure the report is from reliable sources and take confirmation on it may be thru your journalist or any other way you wish,

    What is the point after publishing and try to divert the news to Secretary , he is right to do his unethical job, but jaffan muslim made the mistake

    kindly make sure and thing its implementations in the society, you are not just a media to par with others , you are the society and you are accountable and making accountable

    kindly request to publish this

    You may contact me on ibadun.nizar@gmail.com

    Thanks for reading
    Ibadun Nizar

    ReplyDelete
  5. நன்றி உங்கள் நேர்மைக்கு சான்றுகள் கிடையாது, இனியாவது கல்முனை முதல்வர் விடயத்தில் அவதானம் கட்டுங்கள். குறித்த செய்தியை tamilmirror இணையம் அகற்றியே விட்டது.

    ReplyDelete

Powered by Blogger.