Header Ads



டுபாயில் வேலை நிறுத்த போராட்டம்


(மாலை மலர்)

அரேபிய வளைகுடா நாடுகளில் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளிலிருந்துதான் அதிகமானோர் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்த்து வருகின்றனர். 

இவர்கள் அனைவரும் விடுதி பாணி இடங்களில் தான் தூரத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அப்படி, துபாயில் பல்லாயிரக்கணக்கானோர் மிகப்பெரிய கட்டுமானக்கம்பெனிகள், அரேப்டெக் கம்பெனியில் வேலைபார்த்து வருகின்றனர். 

இவர்கள் அதிகம் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வர்த்தக யூனியன் அமைக்க தடைசெய்யப்பட்டுள்ள வளைகுட அரேபிய எமிரேட்டில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்திருப்பது மிக அரிதான விசயமாக கூறப்படுகிறது. 

அபுதாபியில் சனிக்கிழமை தொடங்கிய இந்த போராட்டம், ஞாயிறன்று துபாயில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.