Header Ads



வெற்றி கொண்டாட்டங்கள் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ளாது!- தேசிய சமாதான பேரவை


இலங்கையில் நடத்தப்படுகின்ற வெற்றிவிழா கொண்டாட்டங்களால் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உள்ளங்களையும் வெற்றிக் கொள்ளும் வகையில் அது அமையாது என்று தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஒரு இராணுவம் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்துகின்ற அதேவேளை, மற்றொரு மக்கள் தமிழ் மக்கள் தங்களின் உறவினர்களை இழந்த நாளாக கருதி கவலைப்படுகின்றனர்.

இத்தகைய கொண்டாட்டங்கள் தமிழ் மக்களின் உள்ளங்களை காயப்படுத்துவதாகவே அமையும். இதன் மூலம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் மீறப்பட்டுள்ளன.

காயப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதல் வழங்க வேண்டும் என்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டு, இரண்டு வருடங்கள் ஆகின்ற போதும், இது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும், இந்த வெற்றி விழா கொண்டாட்டங்களை காண்பித்து நாட்டில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கம் தங்களின் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளும் அதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் உறவினர்களை இழந்த நாளாக கருதி கவலைப்படுவார்கள் என சமாதான பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. சிறுபான்மையினரை இலங்கையில் கொடுமைப்படுத்தி ஆழவேண்டுமென்பதுதான் தற்போதைய அரசாங்கத்தினதும் பாதுகாப்பு அமைச்சரினதும் எண்ணமாகவும் அதன்விழைவாகவே இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நாட்டில் உள்ள மக்களுக்குத்தான் அறியக்கூடியதாக இருக்கின்றது வெளிஉலகிற்கு எம்மால் தெரியப்படுத்த முடியாதவாறு பலதரப்பட்ட முயற்சிகள் அதையும் தாண்டி நாம் செய்திகளை வெளியாக்குகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.