Header Ads



ஹர்பஜன் சிங், விராத் கோஹ்லி ஆகியோரையும் துரத்திய சூதாட்டம்

சூதாட்ட வலையில் ஹர்பஜன், மன்பிரீத் கோனியை சிக்க வைக்க, பாலிவுட் நடிகர் வின்டூ முயற்சித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆறாவது பிரிமியர் தொடரில் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட 19 பேர் டில்லி போலீசிடம் சிக்கினர். பின் பாலிவுட் நடிகர் வின்டூ ரந்த்வா பிடிபட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை அணியின் "கவுரவ' உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் கைதானார். இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வின்டூ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள் குறித்து மும்பை "கிரைம் பிராஞ்ச்' போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது:

புக்கிகளின் வேண்டுகோளின் படி, தன்னிடம் நட்பாக இருந்த ஹர்பஜன் சிங்கை முதலில் அணுகினார் வின்டூ. அடுத்து சென்னை அணியில் முன்பு இருந்த கோனியிடம் "நட்பு' பாராட்டினார். இவர்கள் தவிர, "பிக்சிங்' செய்வதற்காக மூன்றாவது வீரர் (விராத் கோஹ்லியாக இருக்கலாம்) ஒருவரிடமும் பேசினார். ஆனால், ஆறாவது தொடரில் இது எடுபடவில்லை. இருப்பினும், ஏழாவது தொடரில் இவர்களை, "பிக்சிங்' செய்ய வைக்க வின்டூ முயற்சித்தார். 

புதிய முயற்சி: அதேநேரம், குருநாத்திடம் இருந்து சென்னை அணியின் தகவல்களை பெற்றது போல, ஹர்பஜன் மற்றும் கோனியிடம் இருந்து மும்பை, பஞ்சாப் அணிகளின் தகவலைப் பெறும் முயற்சியில் வின்டூ இறங்கினார்.

இதற்காக இந்த வீரர்களை சந்தித்த வின்டூ, ஹர்பஜனை மட்டும் எப்படியும் இழுத்து விட வேண்டும் என, படாத பாடுபட்டார். தவிர, பெரும்பாலான வீரர்களிடம் "நட்பு' வைத்திருந்த இவர், வீரர்களுக்கான பார்ட்டிகளை ஒரு போதும் தவற விட மாட்டார். இதனால், ஹர்பஜனிடமும் விசாரணை நடத்தப்படலாம்.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

கமிஷனர் விளக்கம்: இதுகுறித்து மும்பை இணைக்கமிஷனர் ஹிமான்சு ராய் கூறுகையில்,"" வின்டூ பல்வேறு வீரர்களிடம் தொடர்பு வைத்துள்ளார். இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

No comments

Powered by Blogger.