Header Ads



ஈராக்கில் வன்முறை - 57 பேர் மரணம், 140 பேர் காயம்

ஈராக்கில் வன்முறை தீவிரமடைந்து வருகிறது. 27-05-2013 தலைநகர் பாக்தாத்தில் பல்வேறு பகுதிகளில் குண்டுகள் நிரப்பப்பட்ட கார்கள் வெடித்து சிதறின.

 மார்க்கெட், பேருந்து நிலையம் என 11 இடங்களில் நடத்தப்பட்ட இந்த அரசியல் மற்றும் பிரிவினைவாத தாக்குதலால் ஈராக் நிலைகுலைந்து போயிள்ளது. இதில் குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் என 57-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

 இந்த மாதம் மட்டும் இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.


No comments

Powered by Blogger.