Header Ads



முஸ்லிம் காங்கிரசை உடைப்பதற்கு சதி - ஏ.எல்.தவம்

(எஸ்.அன்சப் இலாஹி)

முஸ்லிம் காங்கிரஸ் அமைதியாக இருந்து அவர்கள் அறியாப்புறத்தில் அதிகம் சாதித்து விட்டதாக இப்போது அதிகாரத்தில் இருக்கும் சில பௌத்த கடும் போக்குவாதிகள் நினைக்கிறார்கள். அதனால், இந்த இயக்கத்தை பலவீனப்படுத்தும் சதித்திட்டங்களை மிக வேகமாகத் தொடங்கியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக, முஸ்லிம் காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகளை குறிவைத்து, அமைச்சுப்பதவிகளையும், கொந்தராத்துக்களையும் காட்டி ஆசையூட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பு, முஸ்லிம் காங்கிரசை உடைப்பதற்கு பம்பரமாய்ச் சுழல்கின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.

அம்பாரை மாவட்ட வணிகத்துறை பட்டதரிகள் சங்க ஒன்றுகூடல் அண்மையில் சம்மாந்துறையில் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

 பல்கலைக்கழக நண்பர்கள் பலர் இங்கே இருக்கிறீர்கள். கடந்த காலங்களில் என்னையும் எனது செயற்பாட்டையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எந்த முகாமில் நான் இருந்தாலும் சமூகத்திற்கு ஒரு அபாயம் வருகின்றபோது வெறும் பார்வையாளனாக மட்டும் ஒரு போதும் நான் இருந்தது கிடையாது. அப்படித்தான், பொதுபலசேனாவின் விரோதச் செயற்பாடுகளால் முஸ்லிம் சமூகம் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டிருக்கும் போது, கீழ்த்தரமான அரசியல் லாபங்களை மட்டும் மனதிற் கொண்டு செயற்படும் ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை  இருந்திருக்குமாக இருந்தால், நான் எப்போதே எனது பதவியை திறந்திருப்பேன்.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இந்த இயக்கம் சலசலப்பில்லாமல் செய்து முடித்திருக்கும் மிக நுணுக்கமான ராஜதந்திர ரீதியிலான காய்நகர்த்தல்களை, தலைவர் ரஊப் ஹக்கீமுடன் மிக நெருக்கமாக இருந்து கண்ணூடாகப் பார்த்தும் அறிந்தும் இருப்பதால் இந்த இயக்கத்தின், முஸ்லிம்கள் பற்றிய பிரக்ஞையும், அதனை அடைந்து கொள்ள அது கைக்கொள்ளும் யாருக்கும் நோகாத, குறிப்பாக இந்த இயக்கத்தையும் சமூகத்தையும் யாரும் நொந்து கொள்ளாத அணுகுமுறையும்தான் இன்னும் இந்த இயக்கத்தை நம்பவைத்து என்னை சமாதானப்படுத்துகிறது.

இன்று சிலர் கேட்கின்றார்கள், பொதுபலசேனாவின் அட்டகாசத்தை நிறுத்த முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்திருக்கிறது? என்று முஸ்லிம் காங்கிரஸ் பொதுபல சேனாவின் மூக்கணாம் கயிற்றை இழுத்துக்கட்டி வைக்க வைத்திருக்கிறது என்று அவர்களுக்கு நான் பதில் கூறுகின்றேன். பொதுபலசேனாவை பின்னின்று இயக்கியவர்கள் இன்று கண் பிதுங்கிப்போய் இருக்கின்றார்கள், அரபு நாடுகளின் ஆத்திரத்தில் அதிர்ந்து போய்க்கிடக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் மூடிக்கொண்டிருந்தால் இந்த முழு அழுத்தமும் எப்படி வந்திருக்க முடியும்? என்றும் நான் கேட்கவிரும்புகின்றேன். எல்லாவற்றையும் ஊடகங்களில் திறந்து கொட்டுவதுதான் அரசியல் என்றால், அந்த அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் செய்யாது. இப்போது நான் முழு விடயங்களையும் விபரித்துச் சொல்ல முடியாது. மெதுவாய்க் கோடிட்டு மட்டுமே காட்டியுள்ளேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

கடந்த காலங்களிலும் சிலரை கட்சிக்குள் வைத்தும் இன்னும் சிலரை கட்சியை விட்டு வெளியேற்றியும் அமைச்சுப்பதவிகளைக் கொடுத்து இந்தக்கட்சியை உடைக்கப்பார்த்தார்கள். அதில் தோல்வியைத்தான் தழுவினார்கள். இப்போது அதுதான் நடக்கப்போகிறது. ஏனெனில், இந்தக்கட்சி தனிநபர்களில் தங்கியுள்ள கட்சி அல்ல. இது மக்களுடைய இயக்கம். பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், மகாணசபை உறுப்பினர்களாக இருந்தாலும், இந்தக்கட்சியில் இருந்து தனிநபராக மட்டும்தான் வெளியிறங்க முடியுமே தவிர மக்கள் அவர்களோடு போக மாட்டார்கள். அதுமட்டுமல்ல கட்சியை உடைக்க நினைப்பவர்களுக்கும், கட்சியில் இருந்து உடைந்து செல்பவர்களுக்கும்  தகுந்த பாடத்தையும் மக்கள் கற்றுக்கொடுப்பார்கள் என்பதனையும் நான் கூற விரும்புகிறேன்.

முஸ்லிம்களுக்கு பிரச்சினை உண்டுபண்ணி அப்பிரச்சினைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்திரமாக முகம் கொடுக்கின்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை உடைத்து தமது இலக்கை அடையும் முயற்சி காலம் காலமாக நடைபெற்று வந்திருக்கிறது. 2002ம் ஆண்டில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிறகு அதாஉல்லா, றிசாட் போன்றவர்கள் எவ்வாறு பிரிந்தார்களோ அதே பாணியில் இப்போதும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று மேலும் கூறினார்.

6 comments:

  1. "இந்தக்கட்சியிலிருந்து தனிநபராக மட்டும்தான் வெளியிறங்க முடியுமே தவிர மக்கள் அவர்களோடு போக மாட்டார்கள்"...முஸ்லிம் காங்கிறஸ் தலைவரும் அதன் பங்கு தாரர்களும் முஸ்லிம்களை எவ்வளவு அரசியல் முட்டாள்கள் என கணக்குப் போட்டிருக்கிறார்கள் என்பதை அறிய இதுமட்டும் போதுமானது.

    ReplyDelete
  2. சகோதரர் தவம் அவர்களே,உங்கள் மீது நேர்வழி உண்டாகட்டும்.முஸ்லிம் காங்கிரஸின் ராஜ தந்திரம் தான் பொது பல சேனா வை இழுத்து வைத்துள்ளது என்ற உங்களின் கதையை கேட்டு சிரிப்பதை தவிர ஒன்றும் இல்லை ஹக்கீமுக்கு நெருக்கமாக போவதர்ட்கு நீங்கள் காட்டும் இன்னொரு முகம் இது. உங்களை போன்ற அரசியல் வாதிகளை மக்கள் மீறி நடத்திய ஹர்த்தால் மற்றும் வெளிஅழுத்தங்கள்தான் காரணம்.

    நீங்கள் கூறுவது அப்பட்டமான பொய்.கிழக்கு மாகாண ஹர்த்தால் அரசியல்வாதிகளின் சுகபோகத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதால் இன்று தடுமாறுகின்றனர்.மேலும் நீங்கள் அமானிதத்தை பாதுகாப்பவர் என்பதிலும் உண்மை இல்லை.
    அக்கரைபற்று தவிசாளராக இருந்து செய்த ஊழலுக்கு கடைசியில் அஹாவுல்லாவின் கட்டளைப்படி செய்ததாக அறிக்கை விட்டீர்கள்.ஊழல் நடக்கின்ற போது எதிர்க்காமல் ஏன் கட்சியைவிட்டு விலகிய பின்னும் தனக்கு மேயர் பதவி கிடைக்காது என்று தெரிந்த பின்னும் கூறினீர்கள்

    அக்கரைப்பற்றில் காடைத்தனத்தை உருவாகியதர்த்கு நீங்களும் பொறுப்பு என்பதை மறக்க வேண்டாம் .
    அதவுல்லாவிடம் முரண்பட்ட நிலையில் முதலில் அம்பாற தயாரத்ணா மூலம் அரசாங்கத்தில் இணைய எடுத்த முயற்சி சிக்கலானது
    பின்பு அமைச்சர் ரிசாட்டின் கட்சியில் இணைய எடுத்த முயற்சியும் தோல்வியானது.
    இன் நிலையில் உங்கள் தலைவனை எதிர்க்க மு கா இணைத்து இனைத்துகொண்டது.
    அம்பாறை முஸ்லிம்களின் பரம விரோத இனவாதி அமைச்சரின் வளர்ப்புமகன் என்று கூறப்படும் ஒரு கைகூலியின் மூலம் உங்களுக்கு இன்னும் மறைமுகமாக அரசாங்கத்துக்கு விசுவாசியாக இருக்கின்ற உண்மை மு காவிற்கு தெரியாது

    ReplyDelete
  3. We understand you are trying to safe guard your place in the party what you do is good for you. This Man RAUF HAKEEM, all he needs is a Minister post, it does not matter for him SLFP or UNP come.If he is genuine he sould have resigned from the Governemt when Dambullah and Anuradapura masjid were attacked. Dont try to fool and deceive the community. Tawam you get loss dont do this again.

    ReplyDelete
  4. தலைவர் அஷ்ரப் கொலைசெய்யப்பட்டதை கேள்விப்பட்டு நீ பட்டாசு கொளுத்தி குதூகலித்ததை நாங்கள் மறக்கவில்லை.

    இதையெல்லாம் முடிந்தால் கொழும்பில் ஒரு பத்திரிக்கையாளர் மாநாடு நடத்திக் காட்டுங்க

    ReplyDelete
  5. தவம் என்பவர் எப்பவாவது எதையாவது சொன்னால் மக்கள் கொதித்துவிடுகின்றாகள். அவரை ஒருவர்கூட நல்லவர் என்றுசொன்னதாகக்காணவில்லையே, அப்படி அவர் என்னசெய்தார்? நாம் காண்வில்லை.

    ReplyDelete
  6. I dont think SLMC did anything when BBS were on fire. They know only to talk. Same dialogue was given by atthaullah recently .byt the world knows what they're did.

    ReplyDelete

Powered by Blogger.