காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துங்கள் - பிரதேச மக்கள் கோரிக்கை
(அப்துல்சலாம்)
திருகோணமலை,மொறவௌ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அவ்வைநகர்,பாம் மதவாச்சி பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தனது வீடுகளில் பயிர்களை வளர்க்க முடியாத நிலையும்,இரவு நேரங்களில் து_ங்க முடியாமல் பாடசாலை மாணவர்கள் பகலில் வகுப்பு நேரங்களில் து_ங்குவதாகவும்,மரண சடங்குகளின் போது யானைக்கு காவல் காக்க வேண்டிய நிலை தொடர்ந்தும் காணப்படுவதாகவும் மக்கள் தத்தமது கருத்துக்களை ஆவேசத்துடன் வெளிப்படுத்துகின்றனர்.
கடந்த காலங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிருந்ததாகவும் தற்போது காட்டு யானைகளின் தொல்லையால் மீண்டும் கிராமங்களை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறிய பிரதேச மக்கள் பல வருட காலங்களாக காட்டு யானைகளின் தொல்லையை தீர்க்குமாறு
அரச அதிகாரிகளிடம் கூறியும் எதுவித நடவடிக்கை எடுக்காமையினால் மொறவௌ நகர்ப்பகுதியில் அண்மையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து யானைக்கான மின் வேலி அமைப்பதற்கான கட்டைகள் போடப்பட்டு ஆறு மாதங்களாகியும் உக்கிப்போகும் நிலைகள் தோன்றுவதாகவும் வேலி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் கிராம மக்கள் மேலும் தெரிவித்தனர்.
மின்சார வேலி அமைப்பது குறித்து மொறவௌ பிரதேச செயலாளர் கே.பி.பேமதாசவை (நேற்று வியாழக்கிழமை காலை) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது வேலி அமைப்பதற்கான கட்டைகள் போடப்பட்டிருப்பதாகவும், மின் கம்பிகள் இலங்கையில் இல்லாமையினால் வெளிநாட்டில் ஓடர் பன்னப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர் கம்பிகள் வந்தவும் மின் வேலி அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Post a Comment