Header Ads



ரஷ்யாவில் முஸ்லிம் பெண் தற்கொலை தாக்குதல் - 11 பேர் காயம்

ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள தகெஸ்தான் பகுதியில் 25-05-2013 பெண் ஒருவர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுள் காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.  

தகெஸ்தான் மாகாணத் தலைநகரான மகாச்கலாவில் உள்ள மத்திய சதுக்கத்தில் அந்தப் பெண் தன்னைத்தானே வெடித்துக்கொண்டார் என்று தெரிவித்த காவல்துறையின் தகவல் அதிகாரி இந்த விபத்தில் சிக்கிய குழந்தைகள் பற்றி தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.  

கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து, இதுபோன்ற பெண் தற்கொலை படை தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கிட்டத்தட்ட 24 பெண்கள் இதுவரை ரஷ்யாவின் முக்கிய நகரங்களிலும் ரயில்களிலும், விமானங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

தகெஸ்தானில் பரவியுள்ள முஸ்லிம் புரட்சியாளர்களால் இந்த தற்கொலைத் தாக்குதல்கள் செயல்படுத்தப்படுகின்றன. முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் காகசஸ் பகுதியில் இருந்து வரும் இத்தகையப் பெண்கள் பெரும்பாலும் விதவைகளாகவோ அல்லது பாதுகாப்புத் துறையினரால் கொல்லப்பட்ட போராளிகளின் உறவினர்களாகவோ இருப்பதால் இத்தகைய பெண்கள் கருப்பு விதவைகள் என்று அழைக்கப்படுகின்றனர்.  

இஸ்லாமியப் புரட்சியாளர்களுக்கும் அரசின் பாதுகாப்புத்துறையினருக்கும் இடையில் ஏற்படும் மோதல்களுக்கு தகெஸ்தான் ஒரு முக்கிய மையமாக தற்போது மாறிவிட்டது. 

No comments

Powered by Blogger.