Header Ads



இஸ்மியா பேகத்தின் இஸ்லாமிய நாகரீகம்



நூலின் பெயர் : 

இஸ்லாமிய நாகரீகம் (MCQ  வினா விடைகள்)

நூலாசிரியர்  

M.S. இஸ்மியா பேகம் ( BA Hons , MA )  உதவி விரிவுரையாளர் - தென் கிழக்கு பல்கலைகழகம். 

அநுராதபுர மாவட்டத்தில் கெகிராவைப் பிரதேசத்தில் அமைந்துள்ள கனேவல் பொல எனும் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட எம்.எஸ் இஸ்மியா பேகம், எம்.ஸீ முஹம்மத் சுல்தான், எஸ். குறைசியா ஆகியோரின்  செல்வப் புதல்வியாவார். குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையான இவர்  ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரைக்கும் அஃகனேவல் பொல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்றார். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகள் துறையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முதற்தரத்தில் சித்தியடைந்தார். 

தென்கிழக்குப்பல்கழைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகள் துறையில்  தனது இளமானிப்பட்டத்தினை (2009) யும்  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகள் துறையில் முதுமானிப் பட்டத்தினை (2013)யும் பூர்த்தி செய்துள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்; கடந்த மூன்று வருட காலமாக இஸ்லாமிய கற்கைகள் துறை உதவி விரிவரையாளராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவர் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பொது நலப்பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றார். இஸ்லாம் தொடர்பான விடயங்களை கற்பதிலும் அறிவதிலும் ஆர்வம் காட்டிவரும் இவர் எதிர்காலத்தில் இத்துறையோடு தொடர்பான நூல்களையும் ஆக்கங்களையும் எழுதவதனை  தனது இலக்காகக் கொண்டுள்ளார். இவ்விலக்கின் கன்னி முயற்சியாகவே இந்நூல் எழுதப்பட்டள்ளது. அவரது இம்முயற்சியினை பாராட்டி மேலும் அவரது பணிகள் தொடர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

ஆர்.ஏ சர்ஜுன்
விரிவுரையாளர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.

2 comments:

  1. வாழ்த்துக்கள்..நூலின் பிரதிகள் எங்கு எங்கு கிடைக்கும் என்பதையும் அறியத்தரவும் .நன்றி

    ReplyDelete
  2. மாணவர்கள் சார்பாக நாங்களும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்




    ( தஸ்லீம் இரண்டாம் வருடம்)இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடம்.

    ReplyDelete

Powered by Blogger.