ஆசாத் சாலி வாயை மூடிக்கொண்டு இருக்க உடன்பட்டால் விடுதலை..?
அசாத் சாலி வாயை மூடிக்கொண்டு இருக்க உடன்பட்டால் அவர் விடுதலை செய்யப்படலாமென GTN ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
"நீரிழிவு நோயாளியான நான் உணவு உண்ண மாட்டேன்" என அசாத் உண்ணாநோன்பு மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அசாத்தின் சட்டத்தரணியிடம், "நிலைமை என் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது" என சட்டமா அதிபர் தெரிவித்திருப்பதாக கொழும்பில் இருந்து GTN செய்திகளிற்கு கிடைக்கும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
அசாத் சாலியை கைது செய்து தேவையற்ற சிக்கலை ஏற்படுத்த அரசு தலைமைக்கு பெரியளவில் ஆர்வம் இல்லை. ஆனால் இதை செய்து அவரது வாயை மூடசெய்யுங்கள் என அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் அரசு தலைமையிடம் பெரிதும் வலியுறுத்தி உள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

...முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்க ...........இது அரசு அரங்கேற்றும் நாடகங்களில் ஒன்றோ எனவும் சில வேளைகளில் சந்தேகிக்க தோனுகிறது...
ReplyDeleteinsha allaha allaha always with him
ReplyDeleteஉண்மை கசிய ஆரம்பித்துள்ளது,முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களே முதல் எதிரி போகின்ற போக்கை பார்த்தல் முஸ்லிம் மக்கள் ஒட்டு மொத்தமாகவே ஆசாத் சாலியின் பக்கம் தேர்தலில் அதரவு அளிக்கத்தொடங்கி விடுவார்கள், என்று அவாகளது மனச்சாட்சி உறுத்த தொடங்கி இருக்கும்,ஹக்கீமின் பேச்சும் சில ஊடகங்கள் வெளியுட்டுள்ளது வரலாற்று ரீதியாக நோக்கும் போது, மகாத்மா காந்தி சிறையில் இருக்கும்போதுதான் அவருக்கு ஆதரவு மிகவும் கூடியது, இதனைக்கண்ட வெள்ளையன் அவரை விடுதலை செய்தான், இந்த நிலைமைதான் இலங்கையிலும் கூடிய விரைவில் ஏற்படப்போகிறது.
ReplyDeleteமுஸ்லிம்சகோதர்களே நாம் விழித்துக்கொண்டால் அதுவே நமது சமூகத்தின் வெற்றியாகும்.
அசாத் சாலியை கைது செய்து அவரது வாயை மூடச் செய்யுங்கள் என அரசில் உள்ள முஸ்லிம்???? அரசியல் (வியாபாரிகள்) பாருங்கள் மரம் வெட்ட கோடாரிக் கம்புகள்!!!
ReplyDeleteநாம் சிந்திக்கவேண்டிய நேரம் ஆரம்பித்துவிட்டது:
ReplyDeleteயார் என்ன சொன்னாலும் உடனே நம்பிவிடமுடியாது. இதுபோன்ற விடயங்கள் ஓரளவு உண்மையாக இருக்கக்கூடுமா என்பது சந்தேகப்படக்கூடிய உண்மையாகவிருப்பினும் நாம் எந்த முடிவையும் எடுக்கமுடியாது காரணம், தற்போது முஸ்லிம்களின் பலத்தை உடைக்கவேண்டுமென்பதுதான் பலரது குறிக்கோள் ஆகவே நமக்குள்ளே பார்த்துக்கொள்வோம். வேற்றான் ஒருவன் எதையாவது சொன்னால் அதுவும் நமது சமூகத்திற்குள் குழப்பங்களை உண்டாக்கும் வகையில் எதையாவது சொன்னால் கண்டிப்பாக நாம் அதை அலசி ஆராய்ந்துதான் முடிவு எடுக்கவேண்டும். நேரடியாக ஒருவர் சொன்னால் சரி மூன்றாவது ஒருவரிடமிருந்து தகவல் வந்தால் அதில் கண்டிப்பாக குழப்பும் சதி உள்ளது என்ற கண்ணோட்டத்தில்தால் பார்க்கவேண்டும்.