சட்டவிரோத கருத்தடை ஊசிகளை இலங்கைக்குள் கடத்திய பாகிஸ்தானியர் கைது

(J.M.Hafees)
பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் 30 000 அலகுகள் குடும்பக் கட்டுப் பாட்டு ஊசி மருந்துகளை எடுத்துவந்த பாகிஸ்தானியர் இன்று பி.ப.12.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது.
கொழும்ப கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்துக் கைதானதாகவும் சுங்கப் பிரிவினர் தந்திரமொன்றைக் கையாண்டு சம்பந்தப்பட்ட நபரை அவ்விடத்திற்கு அழைத்து அதன் பின் கைது செய்ததாகத் தெரிவிக்கப் படுகிறது.
52 வயதுடைய மேற்படி பாகிஸ்தான் பிரஜை தொடர்பான விசாரணைகளை சுங்கப் பகுதினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்கலன் ஒன்றில் உருளைக் கிழங்குடன் மறைத்து வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட இதன் பெறுமதி முன்று கோடி ரூபாய்கள் எனத் தெரிய வந்துள்ளது.
Post a Comment