Header Ads



பேராதனைப் பல்கலைகழகத்தின் 75 வது பட்டமளிப்பு விழா (படங்கள் இணைப்பு)


(J.M.HAFEES  + MOHOMED ASIK)

பேராதனைப் பல்கலைகழகத்தின் 75 வது பட்டமளிப்பு விழா (இன்று 2013 05 30) இடம்  பெற்றது. பேராதனைப் பல்கலைகழக உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப் பட்டமளிப்பு விழாவில் 3240 பட்டதாரிகள் தங்களுக்கான பட்டங்களை பெற்றுக் கொண்டனர். இரண்டு அமர்வுகளாக இடம் பெற்ற இப் பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வு  காலை 7.15 மணிக்கு ஆரம்பமானது. இவ் ஊர்வலத்தில் வர்த்தக முகாமைத்துவ கலைப் பீடங்களை சேர்ந்த 2012 ம் ஆண்டு பட்டபடிப்பை முடித்துக் கொண்ட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு இடம் பெற்றது.

பி.ப.2.15 மணிக்கு இடம் பெற்ற இரண்டாம் அமர்வு பட்டமளிப்பு வைபவத்தில் பொறியியல்  விஞ்ஞானம், விவசாயம், மருத்துவம் பல்; மருத்துவம் மிருக வைத்தியம் உற்பட பல்வேறு  பீடங்கiளை சேர்ந்த பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு இடம் பெற்றது. பட்டமளிப்பு வைபவத்தில் பேராதனை பல்கலைகழக வேந்தர் பேராசிரியர் ஈ.ஏப்பாசிங்க உப வேந்தர் அதுல சேனாரத்ன அகியோர் கலந்து கொண்டனர்.

அதே வேலை இப்பட்டமளிப்பு வைபவத்தை  பல்ககலைகழகத்தின் சகல பீடங்களையும் சேர்ந்த பேராசியர்கள் விரிவுரையாளர்கள் போன்றவர்கள் பகிஷ்கரித்தமை குறிப்பிட்த் தக்கது.

கடும் மழைக்கு மத்தியிலும் ஏராளமான பெற்றோர்கள் பார்வையாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டதுடன் ஊர்வலம் செனட் கட்டிடத்திலிருந்து புவியியல் மண்டபம் ஊடாக ஜிம்னாசியத்தை சென்றடைந்தது. அங்கு பட்டமளிப்பு விழா இடம் பெற்றது.





No comments

Powered by Blogger.