Header Ads



முஸ்லிம் தாய் கோமாவில் - 4 வைத்தியர்களுக்கு பிணை


(அப்துல் சலாம் யாசீம்)

கிண்ணியா, குட்டிக்கராச்சி பகுதியைச்சேர்ந்த ஹனுன் நிஸா கடந்த டிசம்பர் மாதம் பிரசவ சத்திர சிகிச்சையின் பின்னர் சுயநினைவற்று  கோமாநிலையில் உள்ள தனது மனைவிக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

6 பிள்ளைகளையும் சுகபிரசவத்தில் பெற்றதாகவும் 2012-12-28ம் திகதி பிரசவத்திற்காக சத்திர சிகிச்சை செய்த பின்னரே வைத்தியர்களின் கவனயீனத்தினால்  தனது மனைவியின் கோமா நிலைக்கு காரணம் எனக்கூறி  முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எம்.எச்எம்.ஹம்ஸா (மருதமுனை) ஏ.எம்.பாரூக் (அக்கறைப்பற்று) ஆகியோரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

சந்தேக நபர்களான 4 வைத்தியர்களையும் நீதிமன்றத்துக்கு ஆஐராகுமாறு உத்தரவிடப்பட்டது. வியாழக்கிழமை திருகோணமலை நீதிமன்ற நீதவான் யூ.எல்.எம்.அஸ்ஹர் முன்னிலையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வைத்தியர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ஜே.ஜோதி  உட்பட 14 சட்டத்தரணிகளும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இரண்டு சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜராகினர்.

வழக்கு விவாதத்திற்கப்பட்டபோது பிணை தொடர்பான சமர்ப்பணம் மன்றுக்கு தெரிவிக்கப்பட்டது.

வைத்தியர்களின் சார்பாக இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு பணிச்சங்கேனி பாலம் உடைந்து காணப்பட்டதாகவும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் கட்டில் இருக்கவில்லை எனவும் நீதவான் முன்னிலையில் வைத்தியர்கள் தெரியப்படுத்தினர்.

வழக்கு விசாரணை செய்த நீதவான் பிரதான வைத்திய நிபுணரின் ஆலோசனை பெறுவதற்கு 6ம் திகதி வரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

அத்துடன் நான்கு வைத்தியர்களுக்கும் நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது. நோய் நிருணய அட்டையில் மாற்றங்களோ அல்லது பிரதி செய்யவோ கூடாது அப்படி தவறும் பட்சத்தில் வழங்கமுடியும் வரையில் சிறையில் வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வைத்தியர்களுக்கு 25. ஆயிரம் காசுப் பிணையும், 2 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையும் வழங்கப்பட்டது.

2 comments:

  1. அன்பார்ந்த அரசியல் வாதிகளே தயவு செய்து உங்கள் விளையாட்டுகளை இந்த விடையத்தில் காட்டவேண்டாம் முடிந்தால் உங்களால் முடிந்த உதவியை பாதிகப்பட்ட குடும்பத்துக்கு செய்யுங்கள். முடிந்த வரை உதவுங்கள்.

    ReplyDelete
  2. தயவு செய்து இந்த சகோதரிக்கு நியாயம் கிடைக்கும் வரை அல்லாஹ்வுக்காக யாரும் விட்டு விடாதீர்கள் அத்துடன் டொக்டர் என்ற பெயரில் அரைகுறை வைத்தியம் செய்பவர்களை வைத்தியசாலைகளைவிட்டு வீட்டுக்கனுப்பவேண்டும் அவர்களின் பதவிகள் பறிக்கப்படவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.