ஜனாதிபதி மஹிந்தவுடன் தாய்லாந்து பிரதமர் பேச்சு - உடன்படிக்கைகளும் கைச்சாத்து
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (31ம் திகதி) இலங்கைக்கு வருகை தந்த தாய்லாந்தின் பிரதமர் யின்லக் சின்வாத்ரா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட நிகழ்வில் தாய்லாந்து பிரதமருக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான பல உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டன.





Post a Comment