நைஜீரியாவில் முஸ்லிம், கிறிஸ்த்தவ கலவரம் - 39 பேர் மரணம்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் தராபா மாகாண வுகாரி நகரில், பிப்ரவரி மாதம் நடைபெற்ற கால்பந்து விளையாட்டை தொடர்ந்து அங்கு கிருஸ்தவ- முஸ்லிம்களிடையே கலவரம் மூண்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஜூகூன் பழங்குடியின கிருஸ்தவ மதத் தலைவர் ஒருவர் இறந்துவிட்டார். அவருக்கான இறுதி ஊர்வலம் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வுகாரி பகுதியின் வழியாக நேற்று சென்றது.
அப்போது, இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பயங்கர ஆயுதங்களை கொண்டு இருவரும் தாக்கிக்கொண்டனர். இதில் 39 பேர் பலியாயினர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment