பூச்சி போன்ற சிறிய பறக்கும் ரோபோ - அமெரிக்க கண்டுபிடிப்பு
'ரோபோ' என்று அழைக்கப்படும் எந்திர மனிதனை பலவித உருவங்களில் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். ஆனால், மிக சிறிய பூச்சி போன்று பறக்கும் 'ரோபோ'வை அமெரிக்க நிபுணர்கள் தயாரித்துள்ளனர். ஹார்டுவேர்டு என்ஜினீயரிங் கல்லூரிகளை சேர்ந்த நிபுணர்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக உழைத்து இதை உருவாக்கியுள்ளனர்.
பொதுவாக 'ரோபோ'க்கள் எலெக்ட்ரோ மேக்னடிக் மோட்டார்கள் மூலம் இயக்கப்படும். ஆனால் மிக சிறிய அளவிலான பறக்கும் 'ரோபோ'வுக்கு அதற்கு தகுந்தார் போன்ற மேக்னடிக் மோட்டார் தயாரித்து பொருத்தினர். மேலும் பூச்சி போன்று பறப்பதற்கு 'ரோபோ'வுக்கு மிகவும் மெல்லிய செயற்கை இறக்கைகள் பொருத்தப்பட்டன.
இந்த பறக்கும் ரோபோ இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது நல்ல முறையில் பறந்து சாதனை படைத்தது.

Post a Comment