Header Ads



இலங்கை யானையை விடுவியுங்கள் - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு ஹொலிவுட் நடிகை மனு



பிலிப்பைன்ஸ் மெனிலா நகர சரணாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாலி எனப்படும் இலங்கை யானையை மிருக காட்சி சாலையிடம் கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ஹொலிவுட் நடிகை பெமேலா என்டர்சன் விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனின்யோ அக்கினோவிற்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மாலி எனப்படும் இந்த யானை 1980 ஆண்டு இலங்கையால் மெனிலா சரணாலயத்திற்கு வழங்கப்பட்டது.

இந்தநிலையில், அந்த யானைக்கு சுதந்திர பிரதேசத்தில் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஹொலிவுட் நடிகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஏராளமான வன விலங்கு பாதுகாப்பு அமைப்புக்கள் தமது கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். sfm

No comments

Powered by Blogger.