பொலிஸாருக்கு பயந்து நீரில் மூழ்கியவர் 2 நாட்களின் பின் சடலமாக மீட்பு
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்டமஹதிவுல்வௌ குளத்தில் மீன்பிடிக்கச்சென்றவரின் சடலமொன்று நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் விபுல கவுடர்(34) மஹதிவுல்வௌ,திருகோணமலை பகுதிழையச்சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
இது தொடர்பாக தெரியவருவதாவது-கடந்த வியாழக்கிழமை சட்ட விரோத தடைசெய்யப்பட்ட வலையில் மீன் பிடிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிக்குச்சென்ற பொலிஸார் குளத்தின் காட்டுப்பகுதியின் ஊடாக மீன்பிடியில் ஈடுபட்டு வரும் இருவரையும் கைது செய்ய முற்பட்ட போது தப்பியோடுவதற்காக தண்ணீரில் நீந்து சென்ற வேளையில் நீரில் ஒருவர் மூழ்கியுள்ளார். இருவரில் ஒருவர் தப்பியோடியதாகவும் தெரியவருகின்றது.
தப்பியோடிய நபரை விசாரணை செய்தபோது தன்னுடன் வந்தவருக்கு நீந்துவதற்கு தெரியாமல் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.அதனையடுத்து பொலிஸாரும்,கிராம மக்களும் குளத்தில் தேடுதல் நடவடிக்கையில் கடந்த வியாழக்கிழமை முதல் ஈடுபட்டனர்.அவரின் சொந்த ஊரான கண்டிக்கு பொலிஸாருக்கு பயந்து சென்றிருக்கலாம் எனவும் கிராமமக்கள் சந்தேகங்களை வெளியிட்டனர்.இருந்தபோதிலும் நேற்று சனிக்கிழமை குளத்து ஓரத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவரின் சடலத்தை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் திருச்செந்தில் நாதன் பார்வையிட்டார். சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அடப்பாவிகளா!
ReplyDeleteஅந்த மனிதன் என்ன சுவிஸ்பேங்கில் கணக்கு ஆரம்பிக்கிறதுக்கா மீன்பிடித்தான்..?
சமூகத்தையே ஒட்டுமொத்தமாக கருவறுக்கும் எத்தனையோ குற்றச் செயல்களை செய்கின்ற ஏ.ஸி ரூம் பெரிய மனிதர்களையெல்லாம் விட்டுவிட்டு அன்றாடப் பிழைப்புக்கு வேறுவழியின்றி சிறு குற்றச்செயல்செய்தவனை ஏதோ பெரிய பயங்கரவாதியைப் பிடிப்பதைப்போல.. ஜேம்ஸ்பாண்ட் வேலை பார்த்து ஒரு ஏழையைக் கொன்றுபோட்டீர்களே.. சே!