Header Ads



நிந்தவூரில் இளைஞர் கழக விளையாட்டு போட்டி


(சுலைமான் றாபி) 

இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சினால் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலோடு வருடந்தோறும் நடைபெறும் இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி நிந்தவூரிலும் இடம்பெற்றது. 

இந்த விளையாட்டுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வு இன்று சனிக்கிழமை அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.   இளைஞர் சேவை அதிகாரிகளான எம்.ஐ.எம். பரீட், எம்.ரி.எம்.ஹாரூன், எ.எல்.எம்.அசீம் ஆகியோரில் இணைச் செயற்பாட்டின்  கீழ் நடைபெற்ற  நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி ஆர்.யு.அப்துல் ஜலீல், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் வை.எல். சுலைமாலெவ்வை, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.எச்.உமர்லெவ்வை, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடக மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சருமான எஸ்.எல்.எம்.ஷாபி மற்றும் நிந்தவூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தலைவர்  எஸ்.எம்.இஸ்மத் அவர்களும் கலந்து கொண்டதோடு இந்தப்போட்டிகளுக்கான நடுவர் கடமைகளை உடற்கல்வி ஆசிரியர்கள் மேற்கொண்டனர். 

இந்நிகழ்வில் இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. 


No comments

Powered by Blogger.