Header Ads



புதிய இன்புலுவன்சா ஏ.எச்.1.என்.1, தொற்று தொடர்பில் எச்சரிக்கை


புதிய இன்புலுவன்சா ஏ எச் 1 என் 1, தொற்று தொடர்பில், அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த தொற்று பரவக்கூடிய விதம் குறித்து சுகாதார  அமைச்சின் தொற்று நோய் பிரிவு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மார், சிறார்கள் ஏனைய நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்கள் மற்றும் 60 வயதைக் கொண்ட வயோதிபர்கள் இந்த நோய் தொற்று தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இருமல், காச்சல், தடிமன், உடல்வலி, தலைவலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமானால், அது தொடர்பாக அவதானப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கர்ப்பிணி தாய்மார் பிரசவ காலத்தை அண்மிக்கும் போது உடற்தகுதியில் குறைபாடுகள் ஏற்படின், அந்த நோய் தொற்று பாரிய அளவில் தொற்றுக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காசல்வீதி மகப்பேறு மருத்துவ மனையில், புதிய இன்புளுவன்சா ஏ எச் 1 என் 1, நோய் தொற்றுடைய 8 கர்ப்பிணித் தாய்மார் தற்சமயம் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டீ சொய்சா மகப்பேறு மருத்துவ மனையிலும் ஒரு கர்ப்பிணித் தாய் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.