O/L தமிழ்மொழி பரீட்சாத்திகளில் கூடியபுள்ளி பெற்றவர்களின் தவல்களை வெளியிடுங்கள்
(மூதூர் முறாசில்)
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தமிழ் மொழிமூலம் தோற்றி தேசியமட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களின் தவல்களை வெளியிடுமாறு இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திடம் இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம். அனஸ், பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம். சலீம் ஆகியோர் கையெழுத்திட்டு பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அக்கோரிக்கைக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு பல நாட்கள் கழிந்து விட்டபோதிலும், இதுவரை தமிழ்மொழிமூலமான தேசிய மட்டநிலை வெளியிடப்படவில்லை.
இதேவேளை, சிங்களமொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றியவர்களின் தேசிய மட்டநிலையானது பெறுபேறுகள் வெளிவந்து சில மணிநேரத்திற்குள் வெளியாகியதுடன் அதில் தெரிவானவர்கள் உடனடியாக ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டுமுள்ளனர்;.
இதேநிலைமையே க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விடயத்திலும் காணப்பட்டது. இச்செயற்பாடானது தமிழ்மொழிமூல மாணவர்களிடையே பெரும் பாதிப்பையும், மன உளைச்சலையும் உண்டுபண்ணும் ஒரு விடயமாகும்.
இன,மத,மொழி வேறுபாடுகளுக்கப்பால், நீதியாகவும், நேர்மையாகவும், விணைத் திறனாகவும் செயற்பட்டு. குறித்த காலத்திற்கு முன்னதாகவே பெறுபேறுகளை வெளியிட்டு சாதனை படைத்துவரும் தங்களது நிர்வாகத்தின்கீழ் இப்படியானதொரு நிலைமை ஏற்படுவது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, இந் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு மேலும் தாமதியாது தமிழ் மொழிமூல பெறுபேறுகளின் தேசிய மட்ட நிலைகளை துரிதமாக வெளியிட்டு. கல்வியில் சமவாய்ப்பையும், பாராட்டுதல்களை யும் பெற்றுக்கொள்வதற்கு வழியேற்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இன மத மொழி வேறுபாடுகளுக்கப்பால் சென்று சேவை செய்வேன் என்பது இதுதானோ!!!!!
ReplyDelete