இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவில் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தயாராகும் பௌத்த பிக்குகள்
தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தங்களுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்த அகில இந்திய பௌத்த பிக்குமார் சபை தீர்மானித்துள்ளது. மஹாராஷ்ரா மாநிலம் நாக்பூர் நகரில் எதிர்வரும் 13 ஆம் திகதி இந்த பேரணி நடத்தப்படவுள்ளது.
நாக்பூரில் பௌத்தர்கள் அதிகம் வாழும் பிரதான நகரில் உள்ள புனித புத்த விகாரையில் இருந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் வரை இந்த பேரணி நடத்தப்பட உள்ளது. அதன்படி மாநில முதன்மை செயலாளர், அரசியல்வாதிகள், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மகஜர்களும் கையளிக்கப்பட உள்ளன.
2500 வருடங்களுக்கு மேல் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஒழுங்கு செய்துள்ளதாக அகில இந்திய பௌத்த பிக்குமார் சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழகத்தில் பிக்குகள் மீதான தாக்குதல் மற்றும் இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் எதிரொலியாகவே இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment