Header Ads



வடக்கு முஸ்லிம்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகம் செய்கிறது


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது மாவட்டங்களில் மீள்குடியேற வருகின்ற போது அவர்களை பிறமாவட்ட மக்களாக சித்தரித்து அம்மக்களை மீண்டும் வெளியேற்றும் துரோகத்தனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்வது கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் வெளியிட்டுள்ள டுத்அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக் குடியேறவருகின்ற போது,அவர்களை இன ரீதியாக வஞ்சிக்கின்ற செயற்பாடுகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது.முஸ்லிம்களை வடக்கிலிருந்து புலிகள் வெளியேற்றுவதற்கு துணை நின்றவர்கள்,முஸ்லிம்களது வாழ்வுரிமை மற்றும் ஏனைய சொத்துக்களையும் கபளீகரம் செய்துள்ளதை யாவரும்.அறிவீர்கள்.இந்த சந்தர்ப்பம் தொடர்ந்து அவர்களது கைகளில் இருக்க வேண்டும் என்பதற்காக வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கு முயற்சிகளை செய்து வருகின்றனர்.

நேற்று முல்லைத்தீவில் பதற்றம்,மக்கள் அச்சம் என்றெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகதாரலிங்கம் ஊடகங்களுக்கு அறிக்கைகளை விட்டுள்ளார்.இந்த அறிக்கை முற்றிலும் பொய்யானது.முல்லைத்தீவில் மிகவும் அமைதியான,வழமையான சூழலே காணப்பட்டது.

பிற மாவட்டத்தில் உள்ள சில அரச எதிர் ஆட்களை அழைத்து வந்து முல்லைத்தீவில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க அவரால் மேற்கொள்ளப்பட்ட சதியாகும்.மேற் கூறப்படும் முள்ளியாவலையில் உள்ள ஆயிரக்கணக்கான காணிகள் தமிழ் மக்களது என்று அவர் பொய்யான கணக்கை வெளியிட்டு அதனை முஸ்லிம்கள் அபகரிக்கின்றனர் என்பதாக சர்வதேசத்துக்கு கூறியுள்ளார்.பிரஸ்தாப காணி வனபரிபாலன திணைக்களத்துக்கு உரியது என்பதை மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.அப்படி எனில் எவ்வாறு அந்த காணி  தமிழ் மக்களுக்குரியதாகும் என கேள்வி எழுகின்றது.

அரச நிர்வாகங்களை செய்வதற்கு அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் அதனை சரியாக செய்கின்றனர். இந்த காணி பிரச்சினை குறித்து அவர்கள் உரிய நடவடிக்கையினை எடுத்துள்ளனர்.நீண்ட காலமாக தமது இருப்பிடங்களை இழந்து தவிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு காணியினை வழங்க வேண்டும் என்பதில் எமது தலைமையும்,நாமும் உறுதியாக இருக்கின்றோம்.அந்த காணி தமிழ் மக்களது என்றால் ஒரு அங்குலத்தைக் கூட நாம் இலவசமாக தந்தாலும் கூட பெற்றுக் கொள்ளமாட்டோம்.ஏனைய சமூகத்தின் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

தொடராக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான அடக்கு முறைகள்,அநீதிகள் என்பனவற்றை பொருமையாக சகித்துக் கொண்டு எமது மக்கள் வாழ்கின்றனர்.

புலிகளினால் துரத்தப்பட்ட இந்த மக்களின் மீள்குடியேற்றம் என்பது அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களை கொண்டுதான் செய்ய முடியுமே தவிர,பிற மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம்களை கொண்டு செய்ய முடியாது என்து யதார்த்தம்.ஆனால் அதே மோவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேறவருகின்ற போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமுன்ற உறுப்பினர்கள்,இந்த மண்ணுக்கு சொந்தக்கார முஸ்லிம்களை பிற மாவட்ட மக்களாக சித்தரித்து அவர்களுக்கு எதிரான இன ரீதியான சிந்தனையினை ஏற்படுத்தி மீண்டும் பிளவினை தோற்றுவிக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் ஹ-னைஸ் பாருக் வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.