சவூதி அரேபிய தடுப்பு முகாமில் இலங்கையர் உயிரிழப்பு
சவுதி அரேபிய தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றிருந்த குறித்த நபர், நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தமாம் முகாமிலுள்ள இலங்கையர் ஒருவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.
நாத்தாண்டியாவை சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விபரங்களை அறிந்துகொள்ளும் பொருட்டு தூதரகத்தின் ஊழியர் நலன்புரி அதிகாரியொருவர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment