Header Ads



400 மரண தண்டனை கைதிகளின் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றம்


(Vi) நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள 400 மரண தண்டனை கைதிகளின் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்படவுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் வயதைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

குறித்த கைதிகளின் வயதைக் கருத்திற் கொண்டு மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரட்ன பல்லேகம சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சிடம் கோரியுள்ளார்.

மரண தண்டனைக் கைதிகளை அண்மையில் சந்தித்த போது அவர்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் குறித்து அறிந்து கொண்டதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.