Header Ads



'நாடு தீப்பற்றி எரிவதிலிருந்து ஜம்மியத்துல் உலமா சபை காப்பாற்றியுள்ளது'


(எம். ரஹ்ளான்)

இலங்கை முஸ்லிம்களின் மிகப் பிரதானமான அமைப்பான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இந்த நாசகார சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல் நிதானமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டு நாடு தீப்பற்றி எரிவதிலிருந்து இந்த நாட்டையும் இங்கே வாழ்கின்ற அனைத்து இன மக்களையும் காப்பாற்றியுள்ளது என உற்பத்தித் திறன் விருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டார்.

05.03.2013 ஏறாவூர் அமீரலி வித்தியாலயத்தில் இடம்பெற்ற 5000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்ட நிகழ்வில் ஸ்ரீஅதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றிய உரையாற்றிய அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மேலும் கூறியதாவது,

30 வருடங்களாக இருந்த நிலைமைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தித் தந்தவர்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இதனைப்பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குழுவினர் எதிர்ப் பிரச்சாரத்தை நடவடிக்கைகளாலும் வார்த்தைப் பிரயோகங்களாலும் ஊடகங்களுக்கூடாகவும் செய்து வருகின்றார்கள் என்பதை முஸ்லிம்கள் சரியாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். நாடு முழுவதிலும் ஒரு தலைகீழான சாதகமான பெரிய மாற்றம் வந்திருக்கின்றது.

இன்று இந்த நாட்டில் இருக்கின்ற அமைதியைச் சீர்குலைப்பதற்காக ஒரு பெரிய சக்தி திட்டமிட்டுச் செயற்படுகின்றது. இந்த அரசாங்கத்தை முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி முஸ்லிம்களின் மன நிலையில் நூறு வீதம் அரசின் மீது வெறுப்பை ஏற்படுத்தி முஸ்லிம்களை ஓரங் கட்டிவிட நினைக்கின்றார்கள்.
    
இப்பொழுது புதிது புதிதாக வெளிநாட்டு உதவிகளுடன் இயக்கங்கள் முளைக்கின்றன. இவர்கள் தங்களுக்கான எதிரிகளைத் தாங்களே கட்டமைக்கின்றார்கள். உலகில் எந்தப்பாகத்திலும் பேரினவாதம் அல்லது பெருந்தேசிய வாதம் எதிரிகள் இல்லாமல் வாழ முடியாது. அரசியல் செய்யவும் முடியாது. அவர்கள் ஜீவித்திருக்க வேண்டுமாக இருந்தால் கட்டாயம் அந்த இடத்தில் எதிராளிகள் இருக்க வேண்டும்.

இயல்பாகவே எதிராளிகள் இல்லையென்றிருந்தால் இந்தப் பேரினவாதிகள் வலிந்து எதிரிகளை உருவாக்குவார்கள். அமைதியாக வாழும் சிறுபான்மைகளை வம்புக்கிழுப்பார்கள். தொடர்ந்தும் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை இனி சிங்கள மக்களின் எதிரிகளாகக் காட்ட முடியாது. வெளிநாடுகளிலே புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களைத்தான் எதிரிகளாகக் காட்ட முடியும்.

ஆகவேதான் இலங்கையிலே வாழ்கின்ற முஸ்லிம்களை இன்னுமொரு எதிரிகளின் கூட்டமாகக் காட்டுவதற்கு பொது பல சேனா போன்ற 26 சிங்கள அமைப்புக்கள் களமிறங்கியிருக்கின்றன. இவர்கள் கூட்டாகச் சேர்ந்தும் தனித்தனியாகவும் தங்களது செயற்திட்டத்தை இலங்கையிலே விஸ்தரித்திருக்கின்றார்கள்.

பொதுப் புத்தியை கிள்ளி விட்டு விஷமத்தனம் புரிபவர்கள்தான் பொது பல சேனா அமைப்பினர். இதன் காரணமாக சிங்கள் பேரினவாத பௌத்த கூடாரத்திற்குள் சிங்கள மக்களை ஒதுக்கிக் கொண்டு போக அவர்கள் நினைக்கின்றார்கள். தமது நடவடிக்கைகள் முஸ்லிம் விரோத செயற்பாடு அல்ல என்று இவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தாலும் இல்லாத ஒன்றை அவர்கள் இட்டுக்கட்டி வசைபாடுகிறார்கள், வம்புக்கிழுக்கின்றார்கள்.

இலங்கை முஸ்லிம்களின் மிகப் பிரதானமான அமைப்பான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இந்த நாசகார சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல் நிதானமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டு நாடு தீப்பற்றி எரிவதிலிருந்து இந்த நாட்டையும் இங்கே வாழ்கின்ற அனைத்து இன மக்களையும் காப்பாற்றியுள்ளது.

ஏனைய மனிதர்களுக்கும் மதங்களுக்கும் கொடுக்கின்ற உயர்வான கண்ணியததை இந்த அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை காப்பாற்றியுள்ளது. அந்த அமைப்பைக் கூட காறி உமிழ்கின்றார்கள். சூழ்நிலை சமகால நிகழ்வுகளுக்கூடாக முஸ்லிம்களை தூண்டிவிடவும் ஆட்கள் வந்துவிட்டார்கள்.

சிறுபான்மை இனங்களின் பொதுப் புத்தியைத் தூண்டி விட்டு அதிலே குளிர்காய நினைப்பவர்களைப் பற்றி சிறுபான்மை இனங்கள் அவதானமாக இருக்க வேண்டும். அடிப்படைவாதம் என்று பொது பல சேனா கூறுவது தவறான விடயம். இலங்கையிலே இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ற ஒன்று இருந்து எத்தனை குண்டுகள் வெடித்திருக்கின்றன என்றும் எத்தனை பேரை ஆயுதங்களுடன் கைது செய்திருக்கின்றீர்கள் என்றும் இந்த அடிப்படையில்லாத பொது பல சேனாவிடம் நான் கேட்க விரும்புகின்றேன்.

தாடியும், தொப்பியும், ஜுப்பாவும், ஹபாயாவும் தான் இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அடையாளம் என்று நீங்கள் சொன்னால் அது உங்களின் அடிமட்ட முட்டாள்தனம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை எனவும் அவர் சொன்னார்.

பாடசாலை அதிபர் எஸ். அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரச, அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளும், பெற்றேர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

7 comments:

  1. puthiye kandu pidippu.eppady sir inthe iruddule kandu pidicheenke?

    ReplyDelete
  2. Hi minister
    You might get another portfolio very soon. Are you a Muslim, don’t you have any feelings about the government’s backing for BBS.
    As far as Rawf Hakeem is the leader of SLMC, you can be a MP/ Minister. Don’t worry about the Muslims.
    Instead of talking against government, you are supporting them. You will learn a lesson in near future.

    ReplyDelete
  3. Alhamdulillah! Allah saved Sri Lanka through His ACJU's supreme guidance from firing the country. We all are thankful to them.

    ReplyDelete
  4. எல்லாரும் ஜோரா ஒரு தரம் கைதட்டுங்க....
    நம்மட வரலாறு படைத்த மட்டகளப்பு மாவட்ட முதலாவது முஸ்லிம் கேவினட் அமைச்சர் பசீர் முதலாவதக வய்திரந்து இருக்கிரார், இவளவு நாலா எங்க இருந்திங்க அமைச்சர் அவர்களே..நாட்டு நாடப்புகள் தெரிந்து தான் ஓழிந்து கொண்டீர்ரோ...

    ReplyDelete
  5. அப்போ உங்களால முடியாதத அவங்க செஞ்சிட்டாங்கங்கிறீங்க.so நீங்கெல்லாம் வெலகிப் போயிடுங்களேன்.நீங்கெல்லாம் இருந்துட்டு என்னதான் பன்னீங்க..?

    ReplyDelete
  6. மிஸ்டர் வியூகம்/காய் நகர்தல், உம்மை போன்ற சூடு சுரணையற்ற சுயநல அரைவேக்காடுகள் முஸ்லிம் காங்கிரசில் இருக்கும் வரை..., முஸ்லிம்கள் உம்மைப் போல் தன்மானம் இழந்த சமூகமாகவே இருக்கும். உம்மைப் போன்ற நச்சுக் களைகள் அகற்றப்பட்டால் தான் மரம் சரியாக வளரும்.

    ReplyDelete
  7. @kuruvi

    //மிஸ்டர் வியூகம்/காய் நகர்தல், உம்மை போன்ற சூடு சுரணையற்ற சுயநல அரைவேக்காடுகள் முஸ்லிம் காங்கிரசில் இருக்கும் வரை..., முஸ்லிம்கள் உம்மைப் போல் தன்மானம் இழந்த சமூகமாகவே இருக்கும். //

    நாங்கள் தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு இருந்தோமே ஒழிய தன்மானம் இழந்த சமூகமாக இருக்கவில்லை. நீங்கள் என்ன சூடேற்றினாலும் நாங்க யோசிக்காம 'துள்ள' மாட்டம்.
    நீங்களும் தான் try பண்றீங்க. விடா முயற்சியுடன் நீங்கள் இடும் பின்னூட்டத்தைப் பார்த்தால் பாவமாக இருக்கு. எங்க அரசியல் வாதிகளையும் எங்களுக்கு தெரியும், உங்க அரசியல் வாதிகளையும் எங்களுக்கு தெரியும். எங்கள வம்புக்கு இழுக்கிற வேல வச்சுக்காதேங்க.

    ReplyDelete

Powered by Blogger.