Header Ads



இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!


(TN) இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் நிர்மாணத்துறையில் அதிகளவு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிங்கப்பூரின் நிர்மாணத் துறை தொழிற்பயிற்சி நிறுவன மொன்று இன்று கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் திறந்து வைக்கப் படவுள்ளது.

Fonda Globle Engineering (Pvt) Ltd. என்ற பெயரில் உருவாக்கப்பட் டுள்ள இப்புதிய தொழில் பயிற்சி நிறுவனத்தின் மூலம் கட்டட நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் துறையில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட SEC (K)   சான்றிதழும் வழங்கப்படும்.

இதன் மூலம் அதிகளவு இலங்கையர்களுக்கு சிங்கப்பூரில் கட்டட நிர்மாணத்துறை, பொறியியல் துறை சார்ந்த தொழில்வாய்ப்புகள் பெற முடியும். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா அமைச்சின் செயலாளர் கர்னல் நிஸ்ஸங்க விஜேரட்ன, பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதிகார, சிங்கப்பூர் பொண்டா நிறுவனத்தின் முகாமையாளர் ஜேம்ஸ் சியவ் ஆகியோர் இன்றைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆகக் குறைந்தது மூன்று மாத பயிற்சியை முடித்துக்கொண்ட பின்னர் 4 மணி நேர செயல்முறை பயிற்சியும், ஒரு மணி நேர எழுத்துப் பரீசையும் நடத்தப்படும் இதில் சித்தியடைபவர்களுக்கு SEC (K)   சான்றிதழ் வழங்கப்படும். 

No comments

Powered by Blogger.