சேது சமுத்திரத் திட்டம் மூலம் இலங்கைக்கு பாதிப்பு - ஜனாதிபதி மஹிந்தவிடம் அறிக்கை
சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில், அனைத்துலக சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளை இந்தியா மீறியுள்ளதாக, மகிந்த ராஜபக்சவுக்கு நிபுணர்கள் குழுவொன்று அறிக்கை அளித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஆராய, மகிந்த ராஜபக்ச, கல்வி அமைச்சின் செயலர் ஆரியரத்ன ஹேவகே தலைமயிலான நிபுணர் குழுவொன்றை நியமித்திருந்தார். இந்தக் குழுவில் கடல்சார் விஞ்ஞானிகள், சூழலியலாளர்கள், புவியியலாளர்கள், கடல்சார் பொறியாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்தக் குழு அளித்துள்ள அறிக்கையிலேயே, சேது சமுத்திரத் திட்டம் இலங்கையின் கடல்சார் மற்றும் சுற்றாடல் வளங்களைப் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் விடயத்தில் அனைத்துலக கடல் சட்டம், கப்பல்களால் மாசடைவதைத் தடுப்பதற்கான அனைத்துலக பிரகடனமான, மார்போல் பிரகடனம் போன்ற அனைத்துலக சட்டங்கள், நெறிமுறைகளை இந்தியா அப்பட்டமாக மீறியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்துலக கடல் எல்லைக்கு நெருக்கமாக 167 கி.மீ நீளமான இந்த சேதுக் கால்வாய் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தினால் இலங்கையில் ஏற்படக் கூடிய சூழலியல் மற்றும் கடல்சார் தாக்கங்களை இந்தியா கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. “ஐ.நாவினால் 1968ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்துலக கடல் சட்டத்தின்படி, சேது சமுத்திரத் திட்டத்தை தொடங்க முன்னர் சிறிலங்காவின் இணக்கப்பாட்டை இந்தியா பெற்றிருக்க வேண்டும்.
சேதுக்கால்வாய் திட்டம் இந்திய - இலங்கை கடல் எல்லைக்கு மிக நெருக்கமாக உள்ளது. அனைத்துலக கடல் எல்லைக்கு அருகே எந்தவொரு நாடும் எத்தகைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமானாலும், இரு நாடுகளினதும் இணக்கம் பெறப்பட வேண்டும்.

We hope the president will accept this recommendation and act accordingly its our our responsibility preserve the nature for our future generation
ReplyDelete