Header Ads



ஸாஹிறா விஸேட பாடசாலை மாணவ, மாணவிகளின் வருடாந்த விளையாட்டு விழா



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கிழங்கை விஸேட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் மட்டு-காத்தான்குடி ஸாஹிறா விஸேட பாடசாலை மாணவ,மாணவிகளின் 2013 வருடாந்த விளையாட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஸாஹிறா விஸேட பாடசாலை மைதானத்தில் கிழக்கிழங்கை விஸேட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.பஷீர் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.

இங்கு விஷேட திறனுடைய மாணவர்களின் 30மீற்றர் ஓட்டம் ,50மீற்றர்ஓட்டம், மா ஊதி மிட்டாய் எடுத்தல்,ஆண்கள் பெண்களுக்கான நீளம் பாய்தல்,உயரம் பாய்தல்,முட்டி உடைத்தல்,போத்தலினுல் கயிறு போடுதல்,குழாயினுள் மாபிள் போடுதல்,குண்டெறிதல்,பந்து போடுதல் ,தட்டெறிதல்,யானைக்கு கண் வைத்தல்,காலினுள் பந்து கொண்டு செல்லல்,அணி நடை,தேகப் பயிற்சி போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

இதன் போது நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்த கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் மற்றும் கௌரவ அதிதிகளான மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைகளின் தலைவர் மௌலவி  எஸ்.எம்.அலியார் (பலாஹி), காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவரும் ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி),காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர்எஸ்எம்.எம்.சுபைர்,கா-குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி எஸ்.சிவநாயகம்  மற்றும் கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளினால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டது.




No comments

Powered by Blogger.