Header Ads



இரும்புப் பெண்மணி மரணம்


இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் இன்று லண்டனில் காலமானார். 

சர்வதேச அரங்கில் பல ஆண்டுகள் ஆளுமை செலுத்தி வந்த மார்கரெட் தாட்சர் சில காலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 87 வயதில் காலமானார்.

 மார்கரெட் தாட்சர் பிரிட்டனின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையும் பழமைவாதக் கொள்கைகளை கொண்ட கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவியாகவும் இருந்துள்ளதுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் ஆளுமை கொண்ட பெண் அரசியல் வாதியாக திகழ்ந்திருந்தார்.  

மார்கரெட் தாட்சர் மறைந்த சில நிமிடங்களிலிலேயே அவரது மறைவு நாட்டுக்கு ஒரு சோகமான நாள் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தனது அஞ்சலியில் தெரிவித்துள்ளார். பலவிதமான எதிர்ப்புகளுக்கு இடையேயும் தாட்சர் வெற்றி பெற்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பிரிட்டனில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன. லண்டனின் புகழ்பெற்ற புனித பால் தேவாலயத்தில் அவருக்கான வழிபாடுகளும் இறுதி நிகழ்வுகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பெரும் திரளான மக்கள் அவரது இல்லத்தின் முன் மலர் கொத்துகளையும், வளையங்களையும் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


No comments

Powered by Blogger.