'இஸ்லாத்தை நிந்திப்பவர்களை தண்டிக்கப் புதிய சட்டங்கள் தேவையில்லை'
இஸ்லாம் மதத்தையும், நபிகள் பெருமானையும் நிந்திப்பவர்களைத் தண்டிக்க கடுமையான புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என ஆயிரக்கணக்கான முஸ்லீம் சமுதாயத்தினர் சமீபத்தில் டாக்காவில் பேரணி ஒன்றினை நடத்தினர்.
ஆனால், புதிய சட்டங்கள் எதுவும் தேவையில்லை என்று நேற்று, பிரிட்டிஷ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் மத சார்பற்ற ஜனநாயக நாடு என்றும், அவரவர் அவர்களுடைய மதத்தைப் பின்பற்றுவதற்கு உரிமை உண்டு என்றும் கூறிய ஹசீனா, மற்றவர் மதத்தைக் குறை கூறுதல் தவறு. அனைவரையும் நாம் பாதுகாக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இஸ்லாம் மதத்தைப் பற்றி இழிவான கருத்துகளைத் தெரிவிப்போர் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் புதிய சட்ட திருத்தங்களுக்காக மூன்று வாரங்கள் கால அவகாசம் கொடுத்துள்ளதாக முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களே போதுமானது என்பது அவர்களுக்குத் தெரியவேண்டும். எனினும், அவர்களுடைய தீர்மானங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

Our leaders(?) are western puppets, Yes no need to bring new law, but implement the sharia law, which is 1400 years old and not man made but designed by the God who created you, me and all in the world.
ReplyDeleteEvery individual has a right to follow their own will, but no one has the right to intervene and critizise others belief. If any citizen is doing so, why not punish them? Are you protecting them telling it is their right.
God also has his own will to reward paradise to only those who obey him purely.
Hasheena, remember this Dunya is not the long lasting place.. you will have to meet Allah..one day. Fear Allah and support his Deen and be fair with all the people of you country. Do not blindly support Atheist.