Header Ads



மது குடித்துவிட்டு கார் ஓட்டிய சவூதிஅரேபிய தூதரக அதிகாரி - ஈரானில் சம்பவம்


ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் அரசியல் கண்ணோட்டங்களில் மாறுபட்டவை. அமெரிக்க அரசினை எதிர்க்கும் ஈரான், சவுதி அரசை அமெரிக்காவின் ஆதரவாளர் என விமர்சிக்கின்றது. தற்போது, சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்சினைகளும், பஹ்ரைன் நாட்டின் போராட்டங்களும் இவ்விரு அரசின் உறவுகளைக் கடினமாக்குகின்றன. இதனை மேலும் பிரச்சினைக்கு உள்ளாக்கும் விதத்தில் ஒரு சம்பவம் ஈரானில் நடந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி, ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் சவுதி அரசின் தூதரக அதிகாரி ஒருவர் குடித்துவிட்டு, காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவருக்குக் காயம் ஏற்பட்டது. அவர் குடித்திருந்ததும் சோதனையில் தெரியவந்தது. காரிலிருந்து மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் மது  அருந்துவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகின்றது.

இதுகுறித்து, சவுதி அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டபோது அந்த அரசு இதனை மறுத்ததோடு, எதிர்பாராமல் ஏற்பட்ட சாலை விபத்து என்று அந்த சம்பவம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. அயல்நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கு விதிவிலக்கு உண்டு என்ற போதிலும், அவர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டின் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று ஈரான் அரசின் பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். மேலும் சவுதியின் அதிகாரிக்கு ஈரானில் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

2 comments:

  1. The first truth as per iran is that it admits selling of LIQUOR in IRAN. Any disagreements???? Or is it a trap to insult the saudis? but Iran claims it is an Islamic country. either way this is against the priciples of Islam.

    ReplyDelete
  2. ராஜதந்திர முறைமைகளின் அடிப்படையில் ஒவ்வொரு தூதரகமும் (குறிப்பாக முஸ்லிம் அல்லாத நாடுகள்) தமது பிரத்தியேக தேவைக்காக மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் குடிபானங்களை வைத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளதை நாம் சவுதி அராபியவிலும் காணலாம். அதற்காக சவுதியில் குடி வகைகள் விற்பனை செய்யப்படுவதாக யாரும் சொல்வதில்லை. இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட சவுத்தி அதிகாரி போதையில் ஓட்டியதையும் ஒருவரின் கொலைக்குக் காரணமாக இருந்ததையும் ஏற்ற்றுக் கொண்டதால் இழப்பீட்டுத் தொகை வழங்க சவுதி அரசு முன்வந்துள்ளது. சவுதி அதிகாரிகள் கொழும்பிலும் தண்ணி அடிப்பது ரஹசியம் அல்லவே.

    ReplyDelete

Powered by Blogger.