Header Ads



'அமெரிக்காவுக்கு ஏற்பட்ட கதிதான், பிரான்ஸுக்கும் ஏற்படும்'' அல்ஹைதா எச்சரிக்கை


"அமெரிக்காவுக்கு ஏற்பட்ட கதி தான், பிரான்ஸ் நாட்டுக்கும் ஏற்படும்,'' என, அல் குவைதா தலைவர் அல்- ஜவாகிரி தெரிவித்துள்ளார்.சர்வதேச அமைப்பான, அல் குவைதாவின் தலைவராக இருந்தவர் ஒசாமா பின் லாடன். பாகிஸ்தானின், அபோதாபாத்தில், அமெரிக்க அதிரடி படையினரால் அவர் கொல்லப்பட்ட பின், அந்த அமைப்பின் தலைவராக அய்மான் அல்-ஜவாகிரி உள்ளார்.

ஆப்ரிக்க நாடான மாலியில், பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவாகளை, பிரான்ஸ் படையினர் ஒடுக்கி வருகின்றனர். இது குறித்து ஜவாகிரி பேசிய,"ஆடியோ' இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதில் ஜவாகிரி குறிப்பிடுகையில், ""இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த மக்கள் ஒன்று பட்டு, அந்நிய படைகளை வெளியேற்ற வேண்டும். கடவுளின் அனுமதியுடன், மாலியில், பிரான்சை எதிர்கொள்வோம். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில், அமெரிக்காவுக்கு ஏற்பட்ட கதி தான், மாலியில், பிரான்சுக்கும் ஏற்படும்,'' என்றார்.



No comments

Powered by Blogger.