யாழ்ப்பாண முஸ்லிம்களின் வீட்டுத்திட்ட விண்ணப்பங்களை கையளிக்கும் நிகழ்வு
யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் வீட்டுத்திட்ட விண்ணப்பங்களை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம்களில் 237 குடும்பங்களுக்கு இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான பூரண விபரங்கள் அடங்கிய கோவைகள் அமைச்சர் மற்றும் ஆளுநரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஒஸ்மானியாக் கல்லூரியின் புனரமைப்பிற்காக 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
இதன்போது ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்), யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), யாழ் மற்றும் வேலணை பிரதேச செயலாளர்கள், ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் முபாரக், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.



Post a Comment