Header Ads



ஓமானில் காலநிலை மாற்றம் - ஆலங்கட்டி மழை


இந்த வாரத்தின் ஐந்தாவது நாளாக  தொடர்ச்சியாக ஓமான் நாட்டின்  அடபகுதியில்  தொடர்ச்சியாகப்  பெய்துவருகின்ற பருவந்தவறிய மழையினால்,இதுவரை பல உயிர்கள் பலியாகியிருக்கின்றன.  இடியுடன் கூடிய மழை மட்டுமன்றி ஆலங்கட்டிமழையும் சில இடங்களில் பெய்ததாக ஓமானின் வளி  மண்டலதினைக்கள ம் கூறுகின்றது.

                      பல வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. பல வீடுகள்,வர்த்தக நிருவனங்களினுள்ளும்  நீர்புகுந்துள்ளது. தொடர்மளையினாலும் வெள்ளத்தினாலும் பாரிய வாகன நெரிசல் காணப்படுகின்றது.போக்குவரத்தும் கணிசமானளவு நேரதாமதமாக நடைபெறுகின்றது.பாதிக்கப்பட்டோரை  மீட்பதில் ஓமானின் முப்படையினரும் பயன்படுத்தப்படுகின்றனர்.விமானப்படையினர் உலங்கு வானூர்திகள் மூலம் மீட்பிலே ஈடுபடுகின்றனர்.

                             இதற்கிடையே ஓமன் நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின் தலைவர்  ஹாமித் அல்  பராஷ்டி  கருத்துத் தெரிவிக்கையில், இன்றும் நாளையும் கூட ஓமானின் வட பிராந்தியத்திலும் ,ஹஜர் மலைப்பகுதியிலும் கணிசமான அளவு மழை பெய்யக்கூடும்  என்றார்.

மலைப்பாங்கான ஓமன் நாட்டின் தரைத்தோற்றமானது , நீர் உறுஞ்சப்படுவதுட்குரிய ,இளையமைப்பை குறைவாகக்கொண்டிருப்பதனால்  தொடர்ச்சியாக  கிடைக்கும் மழையின்  போது  சாய்வான இடத்தினை நோக்கி  மழை  நீர் வேகமாக பாய்ந்தோடுகின்றது. இவ்வாறு பாய்ந்தோடும் நீரானது சிலவேளைகளில் பாதைகளையும் குறுக்கறுத்து பாய்ந்தோடும்,இந்த திடீர் வெள்ளம் ஓமன் நாட்டி மக்களால் "WAADI "வாதி  என அழைக்கப்படுகின்றது. பல இடங்களில் இன்னும் நீர் வழிந்தோடக்கூடியத்தை காண முடிகின்றது.

                                         இள வயதினர் விளையாட்டுத்தனமாக  இந்த வாதிகளை பார்க்கச்செண்று  அதில் மாட்டிக்கொள்கின்றனர்,சிலர் சாகசம் செய்கின்றதாக நினைத்து வெள்ளத்துடன் போட்டி போட்டு வாகனங்களை செலுத்தி வெள்ளத்தில் அடிபட்டுச்சென்றதுமுண்டு.இவ்விடயங்களை கருத்தில் கொண்டு ஓமான் போலிஷ் திணைக்களம் ,பெற்றோர்களுக்கு பிள்ளைகளை கண்காணிக்குமாறு விசேட செய்தியொன்றை இன்று வெளியிட்டுள்ளது.அதுபோல,வெள்ள  நீரினூடாக வாகனங்களை செலுத்தி  வீண் வம்பிலே மாட்ட வேண்டாம் என்று  சாரதிகளுக்கும்  அறிவுறுத்தல் செய்துள்ளது.

No comments

Powered by Blogger.