குருநாகல் பொலிஸ் நிலையம் முன் பௌத்த தேரர்கள் ஆர்ப்பாட்டம்
(இ. அம்மார்)
கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநாகல் கண்டி வீதியில் மில்லவ என்ற இடத்தில் மோட்டார் செக்கில் விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவரை மோதிய குற்றத்திற்க்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை குருநாகல் மஜிஸ்ரேட் நீதவானால் விடுக்கப்பட்டதை எதிர்த்து இன்று குருநாகல் பிரதான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று 05-04-1-2013 மு. ப 11.00 மணி தொடர்க்கம் பி. ப. 3.00 மணி வரை நடைபெற்றது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் முன்னால் பொலிஸ் இன்ஸ்பெக்டர் என்ற காரணத்தினால் அவருக்கு பொலிஸார் ஆதரவு வழங்கியுள்ளனர் என்ற நோக்கிலேயே இந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தாருக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்து அவ்விடத்திற்கு உடன் விஜயம் செய்த அப்துல் சத்தார். குருநாகல் பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திசாநாயக்க மற்றும் குருநாகல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்துல் நசார் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு சமூக நிலைமைக்குக் கொண்டு வந்தார்.
இது குறித்து பொலிஸாருடன் கலந்துரையாடுவதற்காக ஆர்ப்பாட்டம் செய்த முக்கிய பௌத்த தேரர்கள் மூவரும் மற்றும் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் குடும்ப அங்கத்தவர்கள் மூவரையும் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதன் போது சம்மந்தப்பட்ட சந்தேக நபர் விடுவித்தது பொலிஸார் காரணமல்ல எனவும் சம்சந்தேக நபருக்கு பொலிஸார் நீதிமன்றத்திடம் பிணை வழங்க வேண்டாம் எனவும் இம் மாதம் 15 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் என அறிக்கைகளை முன் வைத்திருந்ததாலும் நீதவான் சந்தேக நபரை பிணையில் செல்ல உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பொலிஸாரின் குற்றமல்ல. நீதிமன்றத்தின் அபிப்பிராயப்படி நடந்ததாகும். அவரை பிணையில் விடுதலை செய்யதமையால் அவரை மீண்டு; பொலிஸில் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை என்ற விளக்கங்கள் அளிக்கபட்டன. நீண்ட நேர சமரச முயற்சியின் பின் ஆர்ப்பாட்டக் காரர்கள் மிக அமைதியாக கலைந்து சென்றனர்.

அடுத்தமுறை இவர்கள் நீதிமன்றத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் செய்ய பின்னிற்க மாட்டார்கள் Bbs எல்லோரது மூளை களையும் உறங்க செய்து விட்டது நமது அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் நம்மை எல்லாம் உறங்கச் செய்வதுபோல
ReplyDelete