Header Ads



'கல்விக்கு ஆற்றுகின்ற பங்களிப்பே அளப்பரியது'



(இ. அம்மார்)

தம் சமூகத்திற்கு நாட்டுக்கு கல்விக்கு என பங்காற்றியோருக்கு சேவை நலன் பாராட்டுதல் அவசியமாகும். அவர்கள் வாழும் போதே வாழ்தப்படுதல் வேண்டும். அவர்கள் மரணம் எய்தியவுடன் பாராட்டுதல் என்பது அர்த்தமற்ற விடயமாகும் என்று குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பறகஹதெனிய கல்வி மேம்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் ஏழு இலட்சம் ரூபா செலவில் இலங்கை நாட்டைச் சேர்ந்த சவூதி ஆரேபியா நாட்டில் வதிவிடமாகக் கொண்டு வாழும் சாதீக் ஹாஜியார் அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பாடசாலை மாணவர் ஆசிரியர்களுக்கான கதிரை மேசை தள பாட உபகணரங்கள் வழகுங்தலும் மற்றும் இப்பாடசாலைக்கு தொடர்ந்து பங்களிப்பு நல்குவோரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இன்று 5-04-2013 நடைபெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

அரசாங்கத்தின் மூலம் கல்வி. சுகாதாரம், பாதை அபிவிருத்தி  போன்ற இன்னும் முக்கிய அவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு பெருந் தொகையான நிதி ஒழுக்கீடு  செய்யப்படுகிறது. அதேவேளை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவைகளுள் எல்லாவற்றுக்கும் மேலாக கல்விக்கு ஆற்றுகின்ற பங்களிப்பே அளப்பரியது. அந்த வகையில் இப்பாடசாலையின் தேவைப்பாடுகள் பல்வேறு கட்டம் கட்டமாக  நிறைவேற்றப்படுகிறது. எனினும் தமிழ் மொழி மூல கல்விப் பிரிவினைப் பொருத்த வரையில் ஆசிரியர் பற்றாக் குறை நிலவுகின்றது. இப்பாடசாலையை சகல வளங்களையும் கொண்ட பாடசாலையாக உருவாக்குவதற்கு எல்லாத் தரப்பினருடைய பங்களிப்பும் அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஐ. அப்துர் ரஹ்மான், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர். எஸ். ஏ. எம். பௌஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். அத்துடன் மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர் யாசீம் உள்ளிட்டவர்களுடன் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.