அவசியமின்றி கொழும்புக்கு வராதீர்கள்..!
தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதி அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறு விடயங்களுக்காக கொழும்பு நகரிற்கு வருவதனை தவிர்க்குமாறு பொலிஸார் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தத் தினம் அரச விடுமுறை என்பதால் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்கும் எனவும், அதன் காரணத்தினால் முக்கிய விடயங்களுக்காக மாத்திரமே கொழும்பு நகருக்கு வருமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். nf

Post a Comment