இனவாதத்துக்கு எதிரான மே தினத்தில் அணி திரள்வீர் - அஸாத் சாலி அழைப்பு
இந்த நாட்டின் வரலாற்றில் முதற் தடவையாக இனவாதம், மதவாதம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து மே தினக் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மே தினம் என்பது உழகைகும் தொழிலாளர் வர்க்கத்துக்குரிய தினம்.
உழைப்பாளிகளின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமானால் நாட்டில் இனவாதம் மதவாதம், வர்க்கபேதம் அற்ற சகலரும் சம அந்தஸ்தோடு வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இன்று துரதிஷ்டவசமாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களே மக்கள் மத்தியில் இந்த பேதங்களைத் தூண்டுபவர்களாகவும், இந்த பேதங்களுக்காக உழைப்பவர்களின் அனுசரணையாளர்களாகவும் இருக்கின்றனர். இதனைத் தட்டிக் கேட்பவர்களும், இந்த பிற்போக்குவாத சிந்தனைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களும் பயங்கரவாதிகளாகப் பட்டியலிடப்படுகின்றனர். நாட்டில் கொலைகாரர்களையும் கொள்ளையர்களையும் சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு, மக்கள் உரிமைகளுக்காகவும், மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயங்களுக்காகவும் குரல் கொடுப்பவர்கள் மீது பொலிஸார் ஏவி விடப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டின் மே தின வரலாற்றில் முதற்தடவையாக வெறுமனே தொழிலாளர் உரிமைகளுக்காக மட்டும் கோஷமிடாமல் அந்த உரிமைகளுக்கு மூல தடயாக இருக்கின்ற பிற்போக்கு வாத சிந்தனைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் வகையில் மே தின நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மே தின ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் என்பனவற்றில் அலைஅலையாக திரண்டு வந்து ஆயிரக்கணக்கில் கலந்து இனவாதம், மதவாதம் மற்றும் வர்க்க பேதங்களுக்கு எதிரான எமது பலத்தை வெளிப்படுத்துவோம்.
இடம்: கொழும்பு-12 குணசிங்கபுர பிரைஸ் பார்க் (டேம் வீதி பொலிஸ் நிலையம் மற்றும் பீபள்ஸ் பார்க் கட்டிடத் தொகுதிக்கு எதிரே)
காலம்: மே 1 2013 பி.ப. 1 மணி.
அஸாத் சாலி
பொது செயலாளர் தேசிய ஐக்கிய முன்னணி
நீங்க ஒழிஞ்சி இருந்தா, யார் இத நடத்துற சாலி அய்யா???
ReplyDeleteஉங்க அழைப்புக்கு கிழக்கில் இருந்துதான் ஆயிரக்கணக்கில் மக்கள் படையெடுத்து வரணும். அந்த பலம் அங்குதான் உண்டு. உங்க கொழும்பில ஒரு வாலும் வராது. உதாரணம், ஏப்ரல் 25 இல் அமைதி கர்த்தாலுக்கு அழைத்த போது, கொழும்பில் ஒரு சோனியும் கடையடைப்பு செய்யவில்லை மாறாக ஒட்டுமொத்த கிழக்கும் அதற்கு முழு ஆதரவும் கொடுத்தது. இவ்வாறான கைங்கரியங்கள் மூலம் கிழக்கையும் காட்டிக்கொடுக்கின்ற ஒரு கீழ்த்தரமான முயற்சிதான். முடிந்தால் கொழுபில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் ஒன்றுதிரட்டி காட்டட்டும்.....
Muslim onrusandal allam mudium
ReplyDelete